சாதனைகளை முறியடிக்குமா புதிய சாம்சங் கேலக்ஸி டேப்லெட்?

By Super
|

சாதனைகளை முறியடிக்குமா புதிய சாம்சங் கேலக்ஸி டேப்லெட்?
இது வரையிலும் சாம்சங் கேலக்ஸி டேப் 8.9 இன்ச் மற்றும் 10.1 இன்ச் அளவுகளில் மட்டுமே வருகின்றன. இந்த 2 இரண்டு அளவு டேப்லெட்டுகளும் விற்பனையில் கொடி கட்டிப் பறக்கின்றன. இதை மனதில் வைத்தே சாம்சங் நிறுவனம் தற்போது சாம்சங் கேலக்ஸி டேப் 7.0 ப்ளஸ் என்ற டேப்லெட்டைக் களமிறக்கவிருக்கிறது.

இந்த புதிய கேலக்ஸி டேப் புதிய தொழில் நுட்பங்களுடன் வருகின்றன. இந்த சாம்சங் கேலக்ஸி டேப் 7.0 ப்ளஸைப் பார்த்தால் அது பரவசத்தை ஏற்படுத்துகிறது. இந்த புதிய கேலக்ஸி டேப் 7.0 3ஜி வசதியுடன் மல்டி ட்ச் இன்புட்டைக் கொண்டிருக்கிறது. இதன் திரையின் பிக்சல் ரிசலூசன் 600 x 1024 ஆகும். இதன் திரை 16 மில்லியன் நிறங்களை சப்போர்ட் செய்யும். இதன் 7 இன்ச் எல்சிடி கெப்பாசிட்டிவ் தொடுதிரை மிக அமர்க்களமாக இருக்கிறது.

இதில் மல்டி மீடியா வசதிகளைப் பார்த்தால் இது 2 கேமராக்களைக் கொண்டுள்ளது. இந்த கேமராக்கள் 2048 x 1536 பிக்சல் சூம் வசதியை வழங்குகின்றன. மேலும் இந்த புதிய கேலக்ஸி டேப்லெட்டில் ஜிபிஎஸ், ஜாவா, ப்ளாஷ் மற்றும் எச்எஸ்டிபிஏ போன்ற சாப்ட்வேர்களும் உள்ளன.

இந்த டேப்லெட்டின் பேட்டரி ஒரு தரமான 4000எம்ஏஎச் திறன் கொண்ட லித்தியம் ஐயன் பேட்டரி ஆகும். இந்த சாம்சங் டேப் 64ஜிபி வரை விரிவுபடுத்தக் கூடிய 32ஜிபி இன்டர்னல் மெமரியைக் கொண்டுள்ளது. இந்த டேப்லெட்டின் சிஸ்டம் மெமரி 1ஜிபி ஆகும்.

ஆர்கனைசர் மற்றும் இன்பில்ட் அப்ளிகேசன்கள் என ஏராள வசதிகளை இந்த டேப்லெட் வழங்குகிறது. இந்த டேப்லெட்டின் மொத்த பரப்பு 193.7 மிமீ x 122.4 மிமீ x 9.9 மிமீ ஆகும். அதுபோல் இதன் எடையும் 345 கிராம் மட்டுமே.

சாம்சங் கேலக்ஸி டேப் 7.0 ப்ளஸின் டிசைன் முந்தைய கேலக்ஸி டேப்களை ஒத்திருக்கிறது. இந்த டேப்லட்டின் முன்புறம் க்ரே நிறம் கலந்த கருப்பு நிறத்தில் வருவதால் பார்ப்போரின் மனதைக் கவரும் விதத்தில் இருக்கிறது. இது சிறியதாகவும் மற்றும் எடை குறைந்தும் இருப்பதால் வேலை செய்து கொண்டே இந்த டேப்லட்டை பயன்படுத்த முடியும். அந்த அளவிற்கு இது ஒரு கையடக்க டேப்லெட் ஆகும்.

இந்த சாம்சங் டேப்லட் மல்டி மீடியா ப்ளேயருடன் வருகிறது. இது எல்லாவிதமான ஆடியோ மற்றும் வீடியோ பைல்களை சப்போர்ட் செய்யும். மேலும் இது டிவிக்ஸ் வீடியோ பைல்களைக்கூட சப்போர்ட் செய்யும் திறன் வாய்ந்தது.

இந்த புதிய சாம்சங் கேலக்ஸி டேப் 7 பிளஸ் ரூ.30,000 விலையில் கிடைக்கும்.

Most Read Articles
Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X