Home
Computer

புதிய ஆப்பிள் ஐபேட் அதிக சூடாவதாக புகார்!

By Karthikeyan
புதிய ஆப்பிள் ஐபேட் அதிக சூடாவதாக புகார்!

பலரும் ஆவலுடன் எதிர்பார்த்த புதிய ஐபேடை ஆப்பிள் கடந்த வாரம் விற்பனைக்கு வைத்தது. அதற்குள் இதுவரை 3 மில்லியன் ஐபேடுகள் விற்றுத் தீர்ந்துவிட்டன. ஆனால் தற்போது இணைய தளத்தில் வந்திருக்கும் செய்தி என்னவென்றால் இந்த புதிய ஐபேட் ஐபேட் 2 வைவிட அதிகமாக சூடாவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதாவது இந்த புதிய ஐபேடை தொடர்ந்து 45 நிமிடங்களுக்கு மேல் பயன்படுத்தினால் இது 116 டிகிரி பாரன்ஹீட் (47 செல்சியஸ்) வெப்பத்தை அடைந்து விடுகிறது. இது ஐபேட் 2ஐவிட 13 டிகிர பாரன்ஹீட் அதிகமாகும்.

இந்த குறைபாட்டை கருத்தில் கொண்ட ஆப்பிள் அதற்கு உடனடியாக பதிலையும் கொடுத்திருக்கிறது. அதாவது ரெட்டினா டிஸ்ப்ளே, எ5எக்ஸ் சிப், 4ஜி எல்டிஇ சப்போர்ட் மற்றும் 10 மணி நேர இயங்கு நேரம் கொண்ட பேட்டரி போன்ற வசதிகளைக் கொண்ட இந்த புதிய ஐபேட் ஆப்பிளின் தெர்மல் எல்லைக்குள் மிக அருமையாக இயங்குகிறது. அதனால் வாடிக்கையாளர்கள் இந்த புதிய ஐபேடில் ஏதாவது பிரச்சினையை உணர்ந்தால் உடனடியாக அவர்கள் ஆப்பிள் சேவை மையத்தை அணுக வேண்டும் என்று ஆப்பிள் அறிவுறுத்துகிறது.

ஆப்பிளின் தயாரிப்பு வெளிவந்த முதல் வாரத்தில் இப்படிப்பட்ட புகார்கள் வருவது ஆப்பிளுக்கு புதிது அல்ல. ஏற்கனவே ஆப்பிள் ஐபோன் 4 வந்த போது அதில் ஆன்டனா பிரச்சினை இருப்பதாக புகார்கள் வந்தன. உடனே ஆப்பிளின் முன்னாள் இயக்குனர் மறைந்த ஸ்டீவ் ஜாப்ஸ் ஐபோனை எவ்வாறு கையாள வேண்டும் என்று அதன் வாடிக்கையாளர்களுக்கு விளக்கம் அளித்தார்.

மேலும் அந்த குறைபாட்டை நீக்குவதற்காக ஆப்பிள் இலவச பெட்டிகளையும் அதன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கியது. இப்போது அதுபோல் இந்த புதிய ஐபேடுக்கும் இலவச பெட்டிகள் வழங்கப்படுமா என்று வாடிக்கையாளர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

புதிய ஐபேடுக்கு வந்திருக்கும் வெப்ப பிரச்சினை அதன் விற்பனையைப் பாதிக்குமா என்று போகப் போகத்தான் தெரியும். பொறுத்திருந்து பார்ப்போம்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X