ஆப்பிள் வழங்கும் புதிய ஐபேட் மினி

Posted By: Karthikeyan
ஆப்பிள் வழங்கும் புதிய ஐபேட் மினி

ஆப்பிளின் தயாரிப்புகள் சந்தைக்கு வரும் முன்பே அவற்றைப் பற்றிய ஏராளமான வதந்திகள் இணையதளங்களில் வருவது வழக்கமான ஒன்று. அந்த வகையில் இப்போது ஆப்பிளின் புதிய ஐபேட் மினி என்ற சாதனத்தைப் பற்றிய வதந்திகள் இப்போது இணைய தளங்களை பரவலாக அலங்கரித்துக் கொண்டிருக்கின்றன. இந்த புதிய ஐபேட் மினி 8 இன்ச் அளவிற்கு குறைவாக இருக்கும் என்று அவை தெரிவிக்கின்றன.

குறிப்பாக கிண்டில் பயர் மற்றும் கூகுளின் நெக்சுஸ் 7 டேப்லெட்டைப் பற்றிய அறிவிப்பு வந்ததுமே இந்த ஐபேட் மினியைப் பற்றிய வதந்தியும் வந்துவிட்டது. அதாவது த வால் ஸ்ட்ரீட் ஜேர்னல் என்ற பத்திரிக்கை ஏசியாவின் முக்கிய டேப்லெட் உற்பத்தியாளர்கள் வரும் செப்டம்பரில் சிறிய திரையுடன் ஒரு புதிய ஐபேடை களமிறக்க இருப்பதாக கூறுகிறது. அவர்களை அப்படிப்பட்ட ஒரு சிறிய ஐபேடைத் தயாரிக்குமாறும் ஆப்பிள் கேட்டுக் கொண்டதாக அந்த பத்திரிக்கா கூறுகிறது.

மறைந்த ஆப்பிளின் காரண கர்த்தா திரு. ஸ்டீவ் ஜாப் அவர்கள் சிறிய அளவிலான டேப்லெட்டுகளைத் தயாரிப்பதில் அதிக அளவு அக்கறை காட்டவில்லை. அதற்காக அவ்வாறு குறைந்த அளவிலான டேப்லெட்டுகளைத் தயாரிக்கக் கூடாது என்றும் அவர் ஆப்பிளைக் கட்டளையிடவில்லை.

குறிப்பாக கிண்டில் பயர் டேப்லெட்டுக்கு போட்டியாகத்தான் இப்படிப்பட்ட குறைந்த அளவிலான டேப்லெட்டை ஆப்பிள் களமிறக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot