Home
Computer

இந்த ஆண்டு இறுதியில் வருகிறது ஆப்பிள் மினி ஐபேட்!

By Karthikeyan
இந்த ஆண்டு இறுதியில் வருகிறது ஆப்பிள் மினி ஐபேட்!

புதிய மினி ஐபேடைப் பற்றி ஒரு புதிய வதந்தி வந்திருக்கிறது. இந்த வதந்தியை நெட்டியேஸ் என்ற ஒரு சீன இணையதளம் வெளியிட்டிருக்கிறது.அதில், இந்த ஆண்டின் இறுதியில் ஆப்பிள் ஒரு புதிய மினி ஐபேடை களமிறக்க இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 6 மில்லியன் இந்த மினி ஐபேடுகள் விற்பனைக்கு வரும் என்று இந்த தளம் தெரிவிக்கிறது. மேலும் இந்த மினி ஐபேடு 249 முதல் 299 அமெரிக்க டாலருக்குள் விற்கப்படும் என்று கூறுகிறது.

ஆப்பிள் முன்னாள் தலைவர் மறைந்த ஸ்டீவ் ஜாப்ஸ் ஆப்பிள் விரைவில் சிறிய ஐபேடைக் களமிறக்கும் என்று கூறியிருந்தார். மேலும் குறைந்த விலையில் சிறியதாக வந்த அமேசானின் கின்டில் பயர் டேப்லெட் விற்பனையில் சாதனை படைத்ததால் அப்படிப்பட்ட சிறிய குறைந்த விலை டேப்லெட்டை தயாரிக்க வேண்டும் என்ற எண்ணம் ஆப்பிளுக்கும் ஏற்பட்டுள்ளது. இந்த புதிய சிறிய டேப்லெட் ஆப்பிளின் போட்டியாளர்களை வீழ்த்தி முன்னனியில் இருக்கும் என்ற ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

மேலும் இந்த ஆப்பிளின் புதிய சிறிய ஐபேட் தற்போது வரும் விண்டோஸ் 8 டேப்லெட்டுக்களுக்கு சரியான போட்டியாக இருக்கும் என்ற தகவல்கள் கூறுகின்றன. ஒருவேளை ஆன்ட்ராய்டு டேப்லெட்டுகள் விற்பனையாகமல் இருந்திருந்தால் அது மைக்ரோசாப்ட்டுக்கு அதிர்ஷ்டமாக இருந்திருக்கும். ஆனால் இதுவரை ஐபேடே சந்தையில் முதலிடத்தில் இருக்கிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X