Home
Computer

பட்ஜெட் விலையில் புதிய Infinix லேப்டாப் அறிமுகம்.! என்னென்ன அம்சங்கள்?

இன்பினிக்ஸ் நிறுவனம் புதிய இன்பினிக்ஸ் இன்புக் எக்ஸ்2 பிளஸ் எனும் லேப்டாப் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த லேப்டாப் அட்டகாசமான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளது. மேலும் இந்த லேப்டாப் உடன் ஒரு அசத்தலான ஸ்மார்ட் டிவி மாடலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

 ஃபுல் எச்டி ஐபிஎஸ் டிஸ்பிளே

ஃபுல் எச்டி ஐபிஎஸ் டிஸ்பிளே

புதிய Infinix InBook X2 Plus லேப்டாப் ஆனது 15.6-இன்ச் ஃபுல் எச்டி ஐபிஎஸ் டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. பின்பு 1,920x1,080 பிக்சல்ஸ்,300 நிட்ஸ் ப்ரைட்னஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது
என்பது குறிப்பிடத்தக்கது.

 கோர் ஐ3, கோர் ஐ5, கோர் ஐ7

கோர் ஐ3, கோர் ஐ5, கோர் ஐ7

இந்த லேப்டாப் மாடல் ஆனது இன்டெல் கோர் ஐ3, கோர் ஐ5, கோர் ஐ7 ஆகிய பிராசஸர் ஆதரவைக் கொண்டுள்ளன. அதிலும் கோர் ஐ5 மற்றும் கோர் ஐ7 ஆகியவை Iris Xe integrated graphics ஆதரிக்கின்றன. ஆனால் கோர் ஐ3 மட்டும் Intel UHD graphics ஆதரிக்கிறது.

256ஜிபி/512ஜிபி ஸ்டோரேஜ்

256ஜிபி/512ஜிபி ஸ்டோரேஜ்

அதேபோல் புதிய இன்பினிக்ஸ் இன்புக் எக்ஸ்2 பிளஸ் 8ஜிபி/16ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி/512ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவும் கொண்டுள்ளது. மேலும் விண்டோஸ் 11 ஹோம் மூலம் இயங்குகிறது இந்த புதிய இன்பினிக்ஸ் லேப்டாப் மாடல். எனவே இந்த லேப்டாப் மாடலை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

ஃபுல் எச் வெப்கேம்

ஃபுல் எச் வெப்கேம்

குறிப்பாக இன்பினிக்ஸ் இன்புக் எக்ஸ்2 பிளஸ் மாடல் ஃபுல் எச் வெப்கேம், டூயல் எல்இடி பிளாஷ், டூயல் மைக்ரோ போன், 1.5W டூயல் ஸ்பீக்கர்கள் எனப் பல சிறப்பான வசதிகளை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

 65W பாஸ்ட் சார்ஜிங்

65W பாஸ்ட் சார்ஜிங்

இன்பினிக்ஸ் இன்புக் எக்ஸ்2 பிளஸ் மாடல் ஆனது 50Wh பேட்டரி ஆதரவைக் கொண்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் இதை சார்ஜ் செய்ய 65W பாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால் 10 மணி நேரம் வரை பேட்டரி பேக்கப் வழங்கும் இந்த இன்பினிக்ஸ் லேப்டாப்.

கனெக்டிவிட்டி

கனெக்டிவிட்டி

எச்டிம்எஐ போர்ட், இரண்டு யுஎஸ்பி டைப்-சி போர்ட், இரண்டு யுஎஸ்பி 3 போர்ட்,வைஃபை 6, யுஎஸ்பி டைப்-ஏ போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த இன்பினிக்ஸ் லேப்டாப் மாடல். மேலும் அலுமினியம் அலாய் பினிஷ் கொண்டுள்ள இந்த இன்பினிக்ஸ் இன்புக் எக்ஸ்2 பிளஸ் லேப்டாப்.

ஆரம்ப விலை

ஆரம்ப விலை

ரெட், கிரே மற்றும் புளூ நிறங்களில் இந்த இன்பினிக்ஸ் இன்புக் எக்ஸ்2 பிளஸ் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த லேப்டாப் மாடலை வரும் அக்டோபர் 18-ம் தேதி பிளிப்கார்ட் தளத்தில் வாங்க முடியும். அதேபோல் இந்த லேப்டாப் மாடலின் ஆரம்ப விலை ரூ.32,990-ஆகும்.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
New Infinix InBook X2 Plus Launched in India: Specs, Price and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X