Lenovo திங்க்பேட் எக்ஸ்1 ஃபோல்ட் லேப்டாப் அறிமுகம்: வியக்கவைக்கும் விலை.!
லெனோவா நிறுவனம் புதிய திங்க்பேட் எக்ஸ்1 ஃபோல்ட் எனும் லேப்டாப் மாடலை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த லேப்டாப் ஆனது தனித்துவமான அம்சங்களுடன் சற்று உயர்வான விலையில் வெளிவந்துள்ளது.

லெனோவா திங்க்பேட் எக்ஸ்1 ஃபோல்ட் லேப்டாப்
அதேபோல் லெனோவா திங்க்பேட் எக்ஸ்1 ஃபோல்ட் லேப்டாப் ஆனது இந்த மாதம் அமெரிக்காவில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த லேப்டாப் கருப்பு நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இப்போது லெனோவா திங்க்பேட் எக்ஸ்1 ஃபோல்ட் லேப்டாப் மாடலின்விலை மற்றும் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

அருமையான டிஸ்பிளே
Lenovo ThinkPad X1 Fold (2022) மாடல் ஆனது 16.3-இன்ச் ஒஎல்இடி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 2,024×2,560 பிக்சல்ஸ், 4:3 ஆஸ்பெக்ட் ரேஷியோ, 600 நிட்ஸ் ப்ரைட்னஸ், டால்பி விஷன் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான லேப்டாப் மாடல்.

குறிப்பாக இந்த லேப்டாப் மாடலை மடிக்கும்போது டிஸ்பிளே அளவு 12 அங்குலமாக குறைகிறது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இதன் டிஸ்பிளே பகுதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது லெனோவா நிறுவனம்.

என்ன பிராசஸர்?
12வது ஜெனரல் இன்டெல் கோர் U9 i5 மற்றும் i7 பிராசஸர் வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது லெனோவா திங்க்பேட் எக்ஸ்1 ஃபோல்ட் லேப்டாப். எனவே இந்த லேப்டாப் மாடலை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். அதேபோல் விண்டோஸ் 11 இல் இயங்குகிறது இந்த லெனோவா லேப்டாப்.

1டிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்
32GB LPDDR5 ரேம் மற்றும் 1டிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது புதிய லெனோவா திங்க்பேட் எக்ஸ்1 ஃபோல்ட் லேப்டாப் மாடல். மேலும் வீடியோ கான்பரன்ஸிங்கிற்கு தகுந்த 5எம்பி IR வெப் கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான லேப்டாப்
மாடல்.

நீங்கள் எதிர்பார்த்த பேட்டரி வசதி
லெனோவா திங்க்பேட் எக்ஸ்1 ஃபோல்ட் லேப்டாப் மாடலில் 48Whr பேட்டரி வசதி உள்ளது. பின்பு இதை சார்ஜ் செய்ய 65W ரேபிட் சார்ஜ் வசதியும் உள்ளதுஎன்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக 30 நிமிடம் இதை சார்ஜ் செய்தால் 4மணி நேரம் பயன்படுத்த முடியும் என்று நிறுவனம் கூறியுள்ளது.

அட்டகாசமான கனெக்டிவிட்டி
வைஃபை 6இ, புளூடூத் 5.2, தண்டர்போல்ட் 4 போர்ட், யுஎஸ்பி டைப்-சி 3.2 ஜென் 2 போர்ட் போன்ற பல கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த லெனோவா திங்க்பேட் எக்ஸ்1 ஃபோல்ட் லேப்டாப் மாடல்.

என்ன விலை?
லெனோவா திங்க்பேட் எக்ஸ்1 ஃபோல்ட் லேப்டாப் மாடலின் விலை $2,499 (இந்திய மதிப்பில் ரூ.1,98,600) ஆக உள்ளது. விரைவில் இந்த லேப்டாப் மாடல் அனைத்து நாடுகளிலும் விற்பனைக்கு வரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications