ரூ.10,000ல் புதிய ஆர்கோஸ் டேப்லெட்!

Posted By: Karthikeyan
ரூ.10,000ல் புதிய ஆர்கோஸ் டேப்லெட்!

ஆர்கோஸ் டேப்லெட்டுகளுக்கு உலக அளவில் ஒரு பெரிய வரவேற்பு உள்ளது. ஏனெனில் ஆர்கோஸ் டேப்லெட்டுகள் மற்ற டேப்லெட்டுகளைவிட விலை குறைந்ததாக இருக்கும். அதனால் பலரும் இந்த டேப்லெட்டுகளை வாங்குவதற்கு மிக எளிதாக இருக்கும்.

சமீபத்தில் ஆர்கோஸ் அர்னோவா வரிசை டேப்லெட்டுகளில் ஒரு புதிய டேப்லெட்டை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த புதிய டேப்லெட்டின் பெயர் அர்னோவா 8பி ஜி2 ஆகும். இது அர்னோவா 8ஜி2 டேப்லெட்டின் புதுப்பிக்கப்பட்ட டேப்லெட் ஆகும்.

இந்த புதிய அர்னோவா டேப்லெட்டின் முக்கிய அம்சங்களைப் பார்த்தால் இது ஆன்ட்ராய்டு 2.3 ஜிஞ்சர்ப்ரீடு இயங்கு தளத்தில் இயங்குகிறது. இதன் திரை 8 இன்ச் அளவைக் கொண்டிருக்கிறது. இந்த திரையின் பிக்சல் ரிசலூசன் 800 x 600 ஆகும். மேலும் இந்த டேப்லெட் 1 ஜிஹெர்ட்ஸ் ப்ராசஸரையும், 512 எம்பி ரேமையும் கொண்டுள்ளது. இதன் இன்டர்னல் சேமிப்பு 4ஜிபி அல்லது 8ஜிபியாக இருக்கும். மேலும் வைஃபை மற்றும் ப்ளூடூத் போன்ற இணைப்பு வசதிகளையும் இந்த டேப்லெட்டில் பார்க்க முடயும்.

இந்த புதிய டேப்லெட்டின் டிசைன் பழைய டேப்லெட்டின் டிசைனை ஒத்திருந்தாலும் இதன் ஒரங்கள் கருப்பு நிறத்தில் இருக்கின்றன. அதனால் பார்ப்பதற்கு இந்த டேப்லெட் மிகவும் அழகாக இருக்கிறது. மேலும் இந்த டேப்லெட் ஒரு உறுதியான மற்றும் நீண்ட ஆயுளைக் கொண்ட ஒரு சாதனம் ஆகும். இதை மிக அம்சமாக உள்ளங்கையில் வைத்திருக்க முடியும்.

இந்த புதிய அர்னோவா டேப்லெட்டின் திரை எல்சிடி பேக்லிட் வகையைச் சார்ந்தது ஆகும். இதன் ப்ராசஸர் 1 ஜிஹெர்ட்ஸ் கடிகார வேகத்தைக் கொண்டது. 4ஜிபி மற்றும் 8ஜிபி ஆகிய 2 மாடல்களில் இந்த டேப்லெட் வருகிறது. இந்த டேப்லெட்டின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றாலும் ரூ.10,000க்குள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்