ஆன்ட்ராய்டு ஐஸ்கிரீம் சான்ட்விச் ஓஎஸ்- சிறப்பு தகவல்கள்

By Super
|
ஆன்ட்ராய்டு ஐஸ்கிரீம் சான்ட்விச் ஓஎஸ்- சிறப்பு தகவல்கள்
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஆன்ட்ராய்டு ஐஸ்கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டம் பற்றிய அதிக தகவல்கள் ஆன்லைனில் கசிந்துள்ளன.

ஆன்ட்ராய்டு ஆப்பரேட்டிங் சிஸ்டம் மூலம் ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லெட் சந்தையை கூகுள் கலக்கி வருகிறது. அவ்வப்போது புதிய புதிய வசதிகளுடன் ஆன்ட்ராய்டு ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை அறிமுகப்படுத்தி வாடிக்கையாளர்களை திக்குமுக்காட வைத்து வருகிறது.

இந்த நிலையில், நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் புதிய ஆன்ட்ராய்டு ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை செப்டம்பர் அல்லது அக்டோபரில் அறிமுகப்படுத்த இருப்பதாக கடந்த மேமாதம் கூகுள் அறிவித்தது.

ஆன்ட்ராய்டு ஐஸ்கிரீம் சான்ட்விச் என்று பெயரிடப்பட்ட இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இடம்பெறப் போகும் வசதிகள் குறித்து ஸ்மார்ட்போன் சந்தையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், புதிய ஆன்ட்ராய்டு ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் சாம்சங் நெக்சஸ் போன் ஆன்லைனில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து இணையதளம் ஒன்றில் வெளியிடப்பட்ட தகவலில், வாடிக்கையாளர் ஒருவர் இ-பே ஆன்லைன் வர்த்தக நிறுவனம் மூலம் சாம்சங் நெக்சஸ் ஸ்மார்ட்போனை ஆர்டர் செய்து வாங்கியுள்ளார். அந்த போனில் புதிய ஆன்ட்ராய்டு ஐஸ்கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டம் அப்லோடு செய்யப்பட்டுள்ளதாக அந்த வாடிக்கையாளர் தெரிவித்துள்ளார்.

அந்த போனில் அப்லோடு செய்யப்பட்டுள்ள ஆன்ட்ராய்டு ஐஸ்கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் வசதிகள் மற்றும் தொழில்நுட்ப அம்சங்களை வீடியோ எடுத்து அவர் ஆன்லைனிலும் வெளியிட்டுள்ளார்.

ஜிஞ்சர்ப்ரீடு மற்றும் ஹனிகோம்ப் ஆன்ட்ராய்டு ஆப்பரேட்டிங் சிஸ்டங்களிலிருக்கும் சில பொதுவான வசதிகள் புதிய ஐஸ்கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இடம்பெற்றுள்ளதாக அந்த வீடியோ மூலம் தெரிகிறது.

மேலும், மூவி ஸ்டூடியோ அப்ளிகேஷன், பீப்புள் அப்ளிகேஷன் உள்ளிட்ட புதிய தொழில்நுட்ப வசதிகள் ஐஸ்கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெனிலா 2.3 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இரண்டு ஷார்ட்கட் மெனுக்கள் இருந்தன. ஆனால், இதில் நான்கு பிரத்யேக ஷார்ட்கட்டுகளை கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், போனுக்கு புதிய செய்திகள் வருவதை தெரிவிக்கும் நோட்டிகேஷன் பார் புதிய வடிவமைப்பு பெற்றுள்ளதாகவும், கேமரா யூசர் இன்டர்பேஸ் புதிதாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த புதிய ஆன்ட்ராய்டு ஓஎஸ் யூனிவர்சல் ஆப்பரேட்டிங் சிஸ்டமாக வர இருக்கிறது.

இதன்மூலம், ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லெட்களுக்கு பொதுவான ஆப்பரேட்டிங் சிஸ்டமாக ஆன்ட்ராய்டு ஐஸ்கிரீம் சான்ட்விச் இருக்கும். தற்போது ஸ்மார்ட்போன்களுக்கு ஆன்ட்ராய்டு 2.3 ஜிஞ்சர்ப்ரீடும், டேப்லெட்டுகளுக்கு ஆன்ட்ராய்டு 3.0 ஹனிகோம் ஆப்பரேட்டிங் சிஸ்டமும் தனித்தனியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ஆனால், இவை இரண்டின் கலவையாக ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லெட்டில் பயன்படுத்தும் விதத்தில் இந்த புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X