Home
Computer

பட்ஜெட் விலையில் லேப்டாப் வாங்க ஐடியா இருக்குதா? அப்போ இந்த புதிய Acer லேப்டாப் பாருங்க.!

டெல், சியோமி நிறுவனங்களை பட்ஜெட் விலையில் அசத்தலான லேப்டாப் மாடல்களை அறிமுகம் செய்து வருகிறது ஏசர் நிறுவனம். குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு லேப்டாப் மாடலும் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்கள் இருப்பதால் அதிக வரவேற்பு உள்ளது. இந்நிலையில் ஏசர் அஸ்பையர் 3 லேப்டாப் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது ஏசர் நிறுவனம்.

அருமையான பிராசஸர், நீண்ட நேரம் பேக்கப் தரும் பேட்டரி, தரமான ஸ்பீக்கர்கள் எனப் பல சிறப்பு அம்சங்களுடன் இந்த Acer Aspire 3 லேப்டாப் மாடல் வெளிவந்துள்ளது. மேலும் இப்போது ஏசர் அஸ்பையர் 3 லேப்டாப் மாடலின் விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

பட்ஜெட் விலையில் லேப்டாப் வாங்க ஐடியா இருக்குதா?Acer லேப்டாப்  பாருங்க

அதாவது மெட்டாலிக் ஃபினிஷ் கொண்ட அல்ட்ரா ஸ்லிம் வடிவமைப்பைக் கொண்டுள்ளது இந்த ஏசர் அஸ்பையர் 3 லேப்டாப் மாடல். குறிப்பாக இந்த லேப்டாப் மாடலின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம். அதேபோல் இந்த சாதனம் சிறந்த செயல்திறன் வழங்கும் என ஏசர் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக 15.6-இன்ச் ஃபுல் எச்டி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது இந்த ஏசர் அஸ்பையர் 3 லேப்டாப் மாடல். பெரிய டிஸ்பிளே என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் 1920 x 1080 பிக்சல்ஸ், 16:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, ஏசர் ComfyView, ஏசர் ப்ளூலைட் ஷீல்டு மற்றும் பல சிறப்பான அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த புதிய லேப்டாப் மாடல்.

இந்த ஏசர் அஸ்பையர் 3 லேப்டாப் ஆனது இன்டெல் கோர் ஐ3-என்305 பிராசஸர் வசதியைக் கொண்டுள்ளது. எனவே இந்த லேப்டாப் மாடலை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். குறிப்பாக இன்டெல் கோர் ஐ3-என்305 பிராசஸர் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். எனவே இந்த லேப்டாப் மாடலை நம்பி வாங்கலாம்.

பட்ஜெட் விலையில் லேப்டாப் வாங்க ஐடியா இருக்குதா?Acer லேப்டாப்  பாருங்க

8GB DDR5 ரேம் மற்றும் 256/512ஜிபி எஸ்எஸ்டி வசதியைக் கொண்டுள்ளது இந்த புதிய ஏசர் லேப்டாப் மாடல். டூயல் மைக்ரோபோன்,ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் எனப் பல சிறப்பான வசதிகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான லேப்டாப் மாடல். மேலும் 720p வெப் கேமரா, AI noise reduction மற்றும் Acer Purified Voice அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஏசர் லேப்டாப் மாடல்.

40whr பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த புதிய ஏசர் அஸ்பையர் 3 லேப்டாப் மாடல். குறிப்பாக இதை ஒருமுறை சார்ஜ் செய்தால் 11 மணி நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும் என்று நிறுவனம் கூறுகிறது. எனவே இந்த லேப்டாப் மாடலில் நீண்ட நேரம் கேம் விளையாட முடியும். குறிப்பாக டெல் லேப்டாப்களை விட பல சிறப்பு அம்சங்களை வழங்குகிறது இந்த ஏசர் அஸ்பையர் 3 லேப்டாப்.

புதிய ஏசர் அஸ்பையர் 3 லேப்டாப் மாடலில் டூயல் பேண்ட் வைஃபை, புளூடூத் 5.1, யுஎஸ்பி டைப்-சி போர்ட், டைப் ஏ யுஎஸ்பி 3.2 ஜென்1 மற்றும் எச்டிஎம்ஐ போர்ட், ஹெட்போன் ஜாக் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்த புதிய லேப்டாப் மாடல் விண்டோஸ் 11 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பட்ஜெட் விலையில் லேப்டாப் வாங்க ஐடியா இருக்குதா?Acer லேப்டாப்  பாருங்க

இந்த ஏசர் அஸ்பையர் 3 லேப்டாப் மாடலின் விலை ரூ.39,999-ஆக உள்ளது. பின்பு ஏசர் எக்ஸ்க்ளூசிவ் ஸ்டோர்ஸ், ஏசர் இ-ஸ்டோர், விஜய் சேல்ஸ், அமேசான் உள்ளிட்ட தளங்களில் இந்த லேப்டாப் மாடலை வாங்க முடியும். குறிப்பாக இந்த லேப்டாப் மாடலுக்கு சில தளங்களில் அறிமுக சலுகையும் வழங்கப்பட்டுள்ளது. எனவே சில தளங்களில் இந்த லேப்டாப் மாடல் ரூ.33,999-க்கு வாங்க கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
New Acer Aspire 3 laptop has been launched in India at budget price: Check Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X