Home
Computer

ஷார்ப் வழங்கும் புதிய மல்டி மீடியா டேப்லெட்!

By Karthikeyan
 ஷார்ப் வழங்கும் புதிய மல்டி மீடியா டேப்லெட்!

சமீபத்தில் ஷார்ப் நிறுவனம் தனது புதிய 7 இன்ச் ஆன்ட்ராய்டு டேப்லெட்டை அறிமுகம் செய்திருக்கிறது. இந்த புதிய டேப்லெட்டுக்கு ஷார்ப் ஆர்டபுள்யு-டி107 என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இந்த 7 இன்ச் டேப்லெட் பல புதிய தொழில் நுட்பங்களுடன் வருகிறது.

ஏற்கனவே குறிப்பிட்டதுபோல் இந்த ஷார்ப் டேப்லெட் 7 இன்ச் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இது ஆன்ட்ராய்டு ஜிஞ்சர் ப்ரீடு இயங்கு தளத்தில் இயங்குகிறது. இந்த டேப்லெட்டில் ஆடியோ ஜாக், ஸ்பீக்கர்கள், எச்டிஎம்ஐ இணைப்பு, சிம் கார்டு ஸ்லாட், கேமரா போன்ற அட்டகாசமான சிறப்பு அம்சங்கள் உள்ளன.

இந்த ஷார்ப் டேப்லெட் பலகை வடிவத்தில் இருக்கிறது. இதன் முன்புறம் இயக்கு பட்டன்கள் உள்ளன. இதன் முகப்பு கேமரா மூலம் சிறப்பான வீடியோ உரையாடலை நிகழ்த்தலாம். இதன் பின்புறம் மற்றும் முன்புறம் கருப்பு நிறமும், பக்கவாட்டுகளில் க்ரே நிறமும் உள்ளது. மேலும் இந்த டேப்லெட் ஒரு மெல்லிய ஸ்டைலான டேப்லெட் ஆகும். இதை வெளியிடங்களுக்கு எடுத்துச் செல்வதும் எளிதாக இருக்கும்.

இந்த ஷார்ப் டேப்லெட்டின் 7 இன்ச் டிஸ்ப்ளே தொடு வசதி கொண்டது. இதில் ஆடியோ ஜாக் மற்றும் சூப்பரான ஸ்பீக்கர்கள் உள்ளதால் இதை ஒரு மல்டி மீடியா டேப்லெட் என்று அழைக்கலாம்.

இந்த டேப்லெட் சிம் கார்டு ஸ்லாட் கொண்டு வருவதால் இது ஜிஎஸ்எம் சப்போர்ட்டையும் வழங்கும் என எதிர்பார்க்கலாம். அதோடு இந்த டேப்லெட்டில் நியர் பீல்டு கம்யூனிகேசன் இன்டர்பேசும் இருக்கிறது. இந்த டேப்லெட்டின் விலை பற்றிய தகவல் இன்னும் வெளியிடப்படவில்லை.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X