Home
Computer

என்இசி வழங்கும் புதிய ஆன்ட்ராய்டு டேப்லெட்!

By Karthikeyan
என்இசி வழங்கும் புதிய ஆன்ட்ராய்டு டேப்லெட்!
மின்னணு பொருட்கள் துறையில் என்இசி நிறுவனம் ஒரு சிறந்த பெயரைப் பெற்றுள்ளது. சமீபத்தில் அந்நிறுவனம் என்-06டி எல்டிஇ என்ற புதிய டேப்லெட்டை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த டேப்லெட் வரும் ஏப்ரல் மாதத்தில் விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது.

இந்த டேப்லெட் 7 இன்ச் டிஸ்ப்ளேயைக் கொண்டுள்ளது. இந்த டிஸ்ப்ளேயின் பிக்சல் ரிசலூசன் 1280 x 800 ஆகும். அதுபோல் இந்த டேப்லெட்டில் 1.92 மெகா பிக்சல் கொண்ட மற்றும் 1600 x 1200 கேமரா ரிசலூசன் கொண்ட வெப்காமும் இருக்கின்றது. இதன் இயங்கு தளம் ஆன்ட்ராய்டு 2.3.6 ஜிஞ்சர் ப்ரீடாக இருக்கும்.

இந்த டேப்லெட்டின் முக்கிய அம்சங்களாகப் பார்த்தால் இதன் டிஸ்ப்ளே மல்டி டச் வசதி கொண்டது ஆகும். அதுபோல் இதன் மெமரி 1024எம்பி எல்பிடிடிஆர்2 எஸ்டிஆர்எம் ஆகும். ஆனால் இதில் கார்டு ரீடர் இல்லை. தகவல்களே மேலாண்மை செய்வதற்காக வைபை 802.11 பி/ஜி/என், யுஎஸ்பி 2.0, ப்ளூடூத் மற்றும் எச்டிஎம்ஐ போர்ட் ஆகியவை உள்ளன.

இதன் பேட்டரி 3610 எம்எஎச் லித்தியம் ஐயன் பேட்டரி ஆகும். அதுபோல் இதன் பேட்டரியின் இயங்கு நேரம் மற்றும் இந்த டேப்லெட்டின் தடிமன் ஆகியவற்றைப் பற்றிய தகவல் இன்னும் வெளிவரவில்லை. இதன் சிபியு 1200 மெகா ஹெர்ட்ஸ் க்வல்காம் ஸ்நாப்ட்ரகான் எபிக்யு8060 ப்ராசஸரைக் கொண்டுள்ளது.

இந்த என்இசி டேப்லெட்டின் எடை பேட்டரியுடன் சேர்த்து 350 கிராம் மட்டுமே. மேலும் இதன் மொத்த பரப்பு 120.6 x 199.7 x 9.9 மிமீ ஆகும். மேலும் இதன் ப்ராசஸர் இந்த டேப்லெட்டுக்கு அதிரடியான வேகத்தைக் கொடுக்கும்.

இந்த டேப்லெட்டில் ஆடியோ சப்சிஸ்டம், 3.5 மிமீ ஆடியோ ஜாக், மைக்ரோபோன் மற்றும் லவுட் ஸ்பீக்கர் போன்ற அம்சங்களும் உள்ளன.

மேலும் இந்த என்இசி டேப்லெட்டில் என்எப்சி, ஆன்ட்ராய்டு சந்தை மற்றும் எஸ்ஆர்எஸ் சரவுண்ட் சவுண்ட் போன்ற எல்லா அம்சங்களும் உள்ளன. இந்த டேப்லெட்டின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X