இந்தியா வரும் ஜப்பான் என்இசி லேப்டாப்

Posted By: Staff

இந்தியா வரும் ஜப்பான் என்இசி லேப்டாப்
ஜப்பான் நாட்டைச் சேர்ந்த மொபைல் மற்றும் லேப்டாப் உற்பத்தியாளர்களான என்இசி மற்றும் என்இசி லைவ் லைட் என்ற புதிய லேடப்டாப்பை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். லேப்டாப் வர்த்தகம் குறைந்துள்ள இந்த நேரத்தில் இந்த புதிய என்இசி லைவ் அதன் தரத்திலும் செயல்பாட்டிலும் ஒரு புரட்சியை ஏற்படுத்தும் என நம்பலாம்.

இந்த புதிய லேப்டாப்புகள் உயர்ந்த தொழில்நுட்பத்துடன் வருவதாக என்இசி கூறுகிறது. அதாவது இந்த லேப்டாப் 10.1 இன்ச் டிஸ்ப்ளேயுடன் அனைவரையும் கவரக்கூடிய வண்ணத்தில் வரவிருக்கிறது. மேலும் இதன் 10.1 இன்ச் திரையில் எல்இடி பேக்லிட் டிஸ்ப்ளேவும் உள்ளது.

இதன் 1366 X 768 பிக்ஸல் ரிசலூசன் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. மேலும் இது 1.66 ஜிகாஹெர்ட்ஸ் இண்டல் ஆட்டம் என்570 ப்ராசஸரைக் கொண்டுள்ளது. அதனால் வீடியோ கேம்ஸ் தாராளமாக விளையாடலாம். இதிலுள்ள வீடியோவும் மிக சிறப்பாக இருக்கும். இது மெமரிக்காக டிடிஆர்3யுடன் கூடிய 1ஜிபி ராமை பெற்றுள்ளது. அதேபோல் 250ஜிபி ஹார்ட் டிஸ்கையும் கொண்டுள்ளது.

இதன் ஓஎஸ் விண்டோஸ் 7 ஆகும். இந்த என்இசி லைவி லைட் மெட்டாலிக் சிவப்பு, கருப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் வருகிறது.உலக சந்தையிலும் மற்றும் இந்திய சந்தையிலும் குறைவான விலையிலேயே வரவிருக்கிறது. ஆனால் இந்த ப்ராண்டைப் பற்றி மக்களுக்கு பரவலாகத் தெரியாத ஒன்றே இதன் குறையாகும்.

ஆனால் மற்ற எல்லா வசதிகளிலும் இது சிறப்பாக இருக்கிறது. இதற்கு கண்டிப்பாக கடும் போட்டி நிலவும் என்று நம்பலாம். இதன் விலை ரூ.37,000மாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot