என்இசியின் அசத்தலான அல்ட்ராபுக்!

Posted By: Karthikeyan
என்இசியின் அசத்தலான அல்ட்ராபுக்!

என்இசி நிறுவனம் ஒரு புதிய அல்ட்ராபுக்கைக் களமிறக்குகிறது. லாவி சி அல்ட்ராபுக் என்று இந்த லேப்டாப்புக்கு பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. புதிய தலைமுறைக்கான நோட்புக்குகளைத் தயாரிப்பதில் எப்போதுமே முயற்சி எடுத்துக் கொண்டிருக்கும் என்இசியின் இந்த புதிய அல்ட்ராபுக் அதன் ரசிகர்களுக்கு பரம திருப்தியை வழங்கும் என்று நம்பலாம்.

இந்த என்இசி அல்ட்ராபுக் 13.3 இன்ச் அளவில் அகன்ற திரையில் வருகிறது. இதன் எடை 2.2 பவுண்டுகள் மட்டுமே. இது லித்தியம் மக்னீசியம் உலோகத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது. அதனால் இதன் எடை குறைவாக உள்ளது. இதன் நிறம் பற்றி எந்த ஒரு தகவலும் தெரியவில்லை. ஆனால் வெள்ளி நிறத்தில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த அல்ட்ராபுக் மிக ஸ்டைலாக வரும் என்று என்இசியின் இளம் ரசிகர்கள் மிக ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். இந்த அல்ட்ராபுக்கின் சாப்ட்வேர் மற்றும் ஹார்ட்வேர் போன்ற தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. ஆனால் ஐவி பிரிட்ஜ் சிப்ஸ்களை இந்த அல்ட்ராபுக் கொண்டிருக்கும் என்று நம்பப்படுகிறது.

இந்த அல்ட்ராபுக்கின் விலை இன்னும் தெரியவில்லை. அதுபோல் எப்போது விற்பனைக்கு வரும் என்று தெரியவில்லை. ஆனால் வரும் ஜூன் மாதம் ஜப்பானின் சந்தைக்கு இந்த அல்ட்ராபுக் விற்பனைக்கு வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்