Home
Computer

பட்ஜெட் விலையில் எம்டிஎன்எல் வழங்கும் புதிய டேப்லட்கள்!

By Super

பட்ஜெட் விலையில் எம்டிஎன்எல் வழங்கும் புதிய டேப்லட்கள்!
எம்டிஎன்எல் நிறுவனம் புதிதாக லாஃப்டி டேப் டிஇசட்-300 மற்றும் டிஇசட்-200 என்ற புதிய ஆன்ட்ராய்டு இயங்குதளம் கொண்ட டேப்லட்களை அறிமுகம் செய்கிறது. கடந்த செப்டம்பர் 1ம் தேதி தான் எம்டிஎன்எல் நிறுவனம், டெராகாம் நிறுவனத்துடன் இணைந்து புதிய பட்ஜெட் விலை கொண்ட டேப்லட்களை அறிமுகம் செய்வதாக நமது தமிழ் கிஸ்பாட்டில் செய்திகள் வெளியானது.

இப்போது எம்டிஎன்எல் நிறுவனம் வாடிக்கையாளர்களை எளிதில் கவரும் வகையில், குறைந்த விலை கொண்ட ஆன்ட்ராய்டு டேப்லட்களை அறிமுகம் செய்கிறது. லாஃப்டி டேப் டிஇசட்-300 மற்றும் டிஇசட்-200 என்ற இந்த இரண்டு டேப்லட்களுமே சிறந்த ஆன்ட்ராய்டு 4.0 ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்குதளம் கொண்டு இயங்குவதாகும்.

இந்த லாஃப்டி டேப்லட்கள், எம்டிஎன்எல் சிம் கார்டுகள் கொண்டுதாக இருக்கும். இந்த சிம் கார்டில நிறைய சலுகைகளும் வழங்கப்படும். இதன் ஆன்ட்ராய்டு ஆப்பரேட்டிங் சிஸ்டம் சிறப்பாக இயங்க இதில் 1.2 ஜிகாஹெர்ட்ஸ் ஏ-8 பிராசஸரை வழங்கும். 4 ஜிபி வரை இன்டர்னல் மெமரி வசதியினை பெறலாம். இதில் 32 ஜிபி வரை மெமரி வசதியினை விரிவுபடுத்தி கொள்ளலாம். 512 ரேம் வசதி கொண்ட இந்த டேப்லட்களில் 3,000 எம்ஏஎச் பேட்டரியின் ஆற்றலை பெற முடியும்.

இந்த 2 டேப்லட்களுமே 7 இஞ்ச் திரை வசதியினை கொடுக்கும். 0.3 மெகா பிக்ஸல் கேமராவினை கொடுக்கும் இந்த டேப்லட்களில் வைபை மற்றும் 3ஜி நெட்வொர்க் வசதியினை எளிதாக பெற முடியும். லாஃப்டி டேப் டிஇசட்-300 மற்றும் டிஇசட்-200 ஆகிய இந்த டேப்லட்கள் ரூ. 3,899 விலையினையும், ரூ. 6,299 விலையினையும் கொண்டதாக இருக்கும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X