Home
Computer

குறைந்த விலையில் வரும் புதிய 3ஜி டேப்லெட்!

By Karthikeyan
குறைந்த விலையில் வரும் புதிய 3ஜி டேப்லெட்!

கோபியன் நிறுவனத்தின் துணை நிறுவனமான மெர்க்குரி ப்ராண்ட் கடந்த காலங்களில் பல டேப்லெட்டுகளை களமிறக்கி இருக்கிறது. தற்போது அந்நிறுவனம் மெர்க்குரி எம்டேப் நியோ என்ற புதிய டேப்லெட்டை களமிறக்குகிறது. இந்த நியோ டேப்லெட் 3ஜி வசதி கொண்டது.

இந்த நியோ டேப்லெட்டின் முக்கிய அம்சங்களைப் பார்த்தால் இது அடிப்படையில் ஒரு 3ஜி டேப்லெட் ஆகும். இது 7 இன்ச் டிஸ்ப்ளேயைக் கொண்டிருக்கிறது. அதுபோல் இந்த டிஸ்ப்ளே மல்டி டச் வசதியும் அதுபோல் எச்டி ரிசலூசனையும் கொண்டுள்ளது. இதன் அஸ்பக்ட் ரேசியோ 16:9 ஆகும்.

இந்த நியோ டேப்லெட்டின் டூவல் கோர் ப்ராசஸர் 1ஜிஹெர்ட்ஸ் கடிகார வேகத்தைக் கொண்டுள்ளது. மேலும் இது 4ஜிபி இன்டர்னல் மெமரியையும் அதே நேரத்தில் 32 ஜிபி வரை விரிவுபடுத்தக்கூடிய அளவிற்கு எக்ஸ்டர்னல் மெமரியையும் கொண்டிருக்கிறது. அதற்கான மைக்ரோ எஸ்டி கார்டும் இதில் உண்டு.

இந்த நியோ டேப்லெட் 2 கேமராக்களைக் கொண்டுள்ளது. அதாவது 2 எம்பி ரியர் கேமராவையும் மற்றும் 0.3 மெகா பிக்சல் ரிசலூசன் கொண்ட முகப்புக் கேமராவையும் கொண்டுள்ளது. இதன் பேட்டரி 4000 எம்எஎச் ஆகும்.

இந்த 7 இன்ச் நியோ டேப்லெட் ஒரு அடக்கமான டிவைஸ் ஆகும். ஆனால் மற்ற டேப்லெட்டுகளை விட இது சற்று தடிமனாக இருக்கும். ஆனால் இதை மிக எளிதாக வெளியில் எடுத்துச் செல்ல முடியும். இந்த டேப்லெட் கருப்பு நிறத்தில் மிக அழகாக வருகிறது. இந்த டேப்லெட்டின் கீழ் பகுதியில் 4 டச் சென்சிட்டிவ் பட்டன்கள் உள்ளன. அதுபோல் வீடியோ காலிங் கேமரா திரைக்கு மேல் நடுவில் உள்ளது. இது உள்ளங்கையில் வைப்பதற்கு மிக அம்சமாக இருக்கும்.

இந்த நியோ டேப்லெட்டின் எச்டி டிஸ்பளே பளிச்சென்று இருக்கும். இதன் டூவல் கோர் ப்ராசஸர் இந்த டேப்லெட்டிற்கு சூப்பரான வேகத்தைக் கொடுக்கும். அதனால் மீடியா சார்ந்த அப்ளிகேசன்களை இந்த டேப்லெட்டில் மிக வேகமாக இயக்க முடியும்.

இந்த புதிய நியோ டேப்லெட் 3ஜி நெட்வொர்க் மற்றும் சிம் சப்போர்ட்டையும் வழங்குகிறது. அதனால் இதை ஒரு சாதாரண மொபைல் போன் போன்றும் பயன்படுத்தலாம். இதன் 3ஜி நெட்வொர்க் வசதி தகவல் பரிமாற்றத்திற்கும் மிகவும் ஏதுவாக இருக்கும்.

இந்த நியோ டேப்லெட்டின் விலை ரூ.16,000 ஆகும். மேலும் இது 1 வருடம் உத்திரவாதத்துடன் வருகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X