Home
Computer

நேருக்கு நேர்: எம்எஸ்ஐ மற்றும் மெர்குரி டேப்லெட்டுகள்

By Karthikeyan
நேருக்கு நேர்: எம்எஸ்ஐ மற்றும் மெர்குரி டேப்லெட்டுகள்

டேப்லெட் சந்தையில் குறைந்த விலையில் அதிக அம்சங்களைக் கொண்டு வரும் டேப்லெட்டுகளுக்கு மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. அத்தகைய முக்கியமான இரண்டு தன்மைகளைக் கொண்டுவரும் புதிய டேப்லெட்டுகள் என்றால் அது எம்எஸ்ஐ வின்பேட் என்ஜாய் மற்றும் மெர்குரி எம்டேப் நியோ ஆகிய டேப்லெட்டுகளைச் சொல்லலாம்.

இந்த இரண்டு டேப்லெட்டுகளுமே ஆன்ட்ராய்டு டேப்லெட்டுகள் ஆகும். எம்எஸ்ஐ டேப்லெட் ஆன்ட்ராய்டு 2.2 இயங்கு தளத்தையும் அதே நேரத்தில் மெர்குரி டேப்லெட் ஆன்ட்ராய்யு 2.3 இயங்கு தளத்தையும் கொண்டிருக்கின்றன.

டிஸ்ப்ளேயை எடுத்துக் கொண்டால் இந்த இரண்டு டேப்லெட்டுகளுமே 10 இன்ச் அளவில் மல்டி டச் வசதி கொண்டு வருகின்றன. ஆனால் பிக்சல் ரிசலூசனைப் பொருத்தவரை எம்எஸ்ஐ 1024 x 768யும் மெர்குரி 800 x 400யும் வழங்குகின்றன.

ப்ராசஸரில் சிறிய வேறுபாடு உண்டு. அதாவது எம்எஸ்ஐ டேப்லெட் 1.2 ஜிஹெர்ட்ஸ் கடிகார வேகம் கொண்ட கோர்டக்ஸ் எ8 ப்ராசஸரைக் கொண்டிருக்கிறது. ஆனால் மெர்க்குரி 1 ஜிஹெர்ட்ஸ் கடிகார வேகம் கொண்ட கார்டெக்ஸ் எ9 ப்ராசஸரைக் கொண்டிருக்கிறது.

இந்த இரண்டு டேப்லெட்டுகளுமே இரண்டு கேமராக்களைக் கொண்டிருக்கின்றன. அதாவது எம்எஸ்ஐ டேப்லெட் 1600 x 1200 பிக்சல் ரிசலூசன் கொண்ட 2 மெகா பிக்சல் முக்கிய கேமராவையும் அதே நேரத்தில் 2 மெகா பிக்சல் முகப்பு கேமராவையும் கொண்டுள்ளது. மெர்குரி டேப்லெட்டைப் பொருத்தவரை அது 2 மெகா பிக்சல் முக்கிய கேமராவயும் மற்றும் 0.3 மெகா பிக்சல் முகப்பு கேமராவையும் கொண்டுள்ளது.

அடுத்ததாக இந்த இரண்டு டேப்லெட்டுகளுமே 4 ஜிபி இன்டர்னல் மெமரி கொண்டிருந்தாலும் எம்எஸ்ஐ டேப்லெட் 512 எம்பி ரேமைக் கொண்டிருக்கிறது. இந்த இரண்டின் மெமரியையும் கொடுக்கப்படும் மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் 32 ஜிபி வரை அதிகரிக்க முடியும்.

இணைப்பு வசதிகளைப் பொருத்தமட்டில் இரண்டுமே ப்ளூடூத் வசதி கொண்டிருந்தாலும் மெர்குரி கூடுதலாக எ2டிபி இணைப்பையும் கொண்டிருக்கிறது. அதுபோல் இரண்டும் ஜிபிஎஸ் கொண்டுள்ளன. பொழுதுபோக்கிற்காக இந்த இரண்டு டேப்லெட்டுகளும் மல்டி பார்மட் ஆடியோ ப்ளேயர், வீடியோ ப்ளேயர், டூவல் ஸ்பீக்கர் மற்றும் 3.5 மிமீ ஜாக் போன்ற வசதிகளைக் கொண்டுள்ளன.

பேட்டரியைப் பொருத்தவரை மெர்குரி சற்று அதிகமான சக்தியைக் கொண்டிருக்கிறது. அதாவது மெர்க்குரி 4000 மெகா ஹெர்ட்ஸ் கொண்ட லித்தியம் பேட்டரியைக் கொண்டிருக்கிறது. ஆனால் எம்எஸ்ஐ 3500 மெகா ஹெர்ட்ஸ் கொண்ட லித்தியம் பேட்டரியைக் கொண்டுள்ளது.

இந்த இரண்டு டேப்லெட்டுகளும் பார்ப்பதற்கு அட்டகாசமாக உள்ளன. எம்எஸ்ஐ டேப்லெட்டின் விலை ரூ.17000 ஆகும். ஆனால் மெர்குரி டேப்லெட்டின் விலை ரூ.16000 மட்டுமே. இதில் கலக்கப் போவது யார் என்பது போகப்போகத்தான் தெரியும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X