எம்எஸ்ஐ என்ஜாய் 7 மற்றும் ரிலையன்ஸ் 9ஜி டாப் - ஒரு ஒப்பீடு

Posted By: Staff

எம்எஸ்ஐ என்ஜாய் 7 மற்றும் ரிலையன்ஸ் 9ஜி டாப் - ஒரு ஒப்பீடு
எம்எஸ்ஐ என்ஜாய் என்ற டாப்லட்டை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியதன் மூலம் இந்தியாவில் மற்ற டாப்லட் நிறுவனங்களோடு இந்த நிறுவனமும் போட்டிபோட ஆரம்பித்துவிட்டது.

ரிலையன்ஸ் 9ஜி டேப்பின் வசதிகளை எம்எஸ்ஐ என்ஜாய் டேப்லெட் ஒத்திருந்தாலும் தனக்கென்று ஒரு தனிச்சிறப்பையும் பெற்றுள்ளது. ஆனால் இரண்டுமே பலவற்றில் ஒத்துப்போகின்றன.

இரண்டுமே ஆண்ட்ராய்டு வி2.3 ஜிஞ்சர்பிரீடு ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்குகின்றன. அதிவிரைவாக இயங்கும் வகையிலான யூஸர் இன்டர்பேஸை பெற்றுள்ளன. அதேபோல் இரண்டும் 7 இஞ்ச் டிஎப்டி-எல்சிடி மல்டி தொடுதிரையுடன் 800 x 480 பிக்ஸல் டிஸ்பிளே அளவை பெற்றுள்ளது.

கேமரா பொருத்தவரை ரிலையன்ஸ் 3ஜி டேப் மற்றும் எம்எஸ்ஐ என்ஜாய்-7 ஆகியவை 2 மெகா பிக்ஸல் கேமராவை வழங்குகின்றன. வீடியோ காலிங் வசதிக்காக ரிலையன்ஸ் 3ஜி டாப் 0.3 எம்பி முகப்பு கேமராவை வழங்குகிறது.

பொழுதுபோக்கு அம்சங்களுக்காக மல்டி பார்மெட்களை சப்போர்ட் செய்யும் மியூசிக் மற்றும் வீடியோ ப்ளேயர்கள் இரண்டிலும் உள்ளன. மேலும் வைஃபை மற்றும் ப்ளூடூத் மற்றும் யுஎஸ்பி வசதிகளும் உள்ளன. மேலும் இவற்றில் விரைவாக வெப் ப்ரவுஸிங் செய்ய முடியும்.

எம்எஸ்ஐ என்ஜாய் 7 லயன் 4,700 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரியையும், ரிலையன்ஸ் 3ஜி டேப் லயன் 3,400 எம்ஏஎச் திறன் அளவையும் பெற்றுள்ளன. எம்எஸ்ஐ டேப்லெட் 64ஜிபி வரை அதிகரிக்கக்கூடிய மெமரி சப்போர்ட்டையும், ரிலையன்ஸ் 9ஜி டாப் 32ஜிபி வரை அதிகரிக்கக்கூடிய மெமரி சப்போர்ட்டையும் பெற்றுள்ளன.

எடையை பார்த்தால் எம்எஸ்ஐ டேப்லெட் 395 கிரமாகும். அதே நேரத்தில் ரிலையனஸ் 3ஜி டாப் 389 கிராம் எடையைக் கொண்டுள்ளது. ரிலையனஸ் 3ஜி டாப்பை ரூ. 12,999க்கு வாங்கலாம். எம்எஸ்ஐ என்ஜாய் 7 ரூ. 14,999க்கு கிடைக்கும்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot