நவீன தொழில்நுட்பத்துடன் எம்எஸ்ஐ வழங்கும் புதிய லேப்டாப்புகள்!

By Karthikeyan
|
நவீன தொழில்நுட்பத்துடன் எம்எஸ்ஐ வழங்கும் புதிய லேப்டாப்புகள்!

எம்எஸ்ஐ நிறுவனம் சமீபத்தில் இரண்டு புதிய லேப்டாப்புகளைக் களமிறக்க இருக்கிறது. இந்த புதிய லேப்டாப்புகளுக்கு எம்எஸ்ஐ சிஎக்ஸ்61 மற்றும் எம்எஸ்ஐ சிஆர்61 என்ற பெயர்கள் சூட்டப்பட்டிருக்கின்றன. குறிப்பாக இந்த இரண்டு லேப்டாப்புகளுமே சூப்பரான நவீன தொழி்ல் நுட்பங்களுடன் வந்தாலும் அவை ஏறக்குறைய இரண்டிலும் சம அளவில் இருக்கின்றன.

ஒரே ஒரு அம்சத்தில் மட்டும் இந்த இரண்டு லேப்டாப்புகளும் வேறுபடுகின்றன. அதாவது சிஎக்ஸ்61 லேப்டாப் என்விடியா ஜிஇபோர்ஸ் ஜிடி640எம், 2ஜி விரேம் மற்றும் என்விடியா ஜிஇபோர்ஸ் ஜிடி630எம்+2ஜி விரேம் க்ராபிக்ஸ் கார்டுகளைக் கொண்டிருக்கிறது. ஆனால் சிஆர்61 லேப்டாப் இன்டல் எச்டி க்ராபிக்ஸ் கார்டைக் கொண்டிருக்கிறது. மற்ற எல்லா அம்சங்களும் இந்த இரண்டு லேப்டாப்புகளுக்கும் பொதுவாகவே உள்ளன.

அதாவது இந்த இரண்டு லேப்டாப்புகளும் மிகவும் துல்லியமான 15.6 இன்ச் அளவில் எச்டி திரைகள் உள்ளன. அதோடு இவற்றில் எச்டி வெப்காமும் உள்ளது. இன்டல் 3ஜி கோர் ஐ ப்ராசஸர்கள் மற்றும் இன்டல் எச்எம்76 சிப்செட் ஆகியவை இந்த இரண்டிலுமே உள்ளன.

இந்த இரண்டு எம்எஸ்ஐ லேப்டாப்புகளும் மைக்ரோசாப்டின் ஜெனியூன் விண்டோஸ் 7 ஹோம் பிரீமியம் இயங்கு தளத்தில் இயங்குகின்றன. இணைப்பு வசதிகளுக்காக யுஎஸ்பி, வைபை மற்றும் ப்ளூடூத் வசதிகளைக் கொண்டிருக்கின்றன. அதோடு இந்த லேப்டாப்புகளில் 5 இன் 1 கார்ட் ரீடரும் உண்டு. இந்த லேப்டாப்புகளில் இருக்கும் 6 செல் பேட்டரி 7.5 மணி நேர இயங்கு நேரத்தை வழங்குகிறது.

இந்த லேப்டாப்புகளில் க்ராபிக்ஸ் வேலைகளை மிக சிறப்பாக செய்ய முடியும். அதோடு இவை மிகவும் வேகமாக இயங்கும் ஆற்றல் கொண்டவை. இந்த லேப்டாப்புகள் 8ஜிபி டிடிஆர்3 சேமிப்புடன் வருகின்றன. அதோடு இவற்றில் 500ஜிபி, 640ஜிபி மற்றும் 720ஜிபி ஆகிய அளவுகளில் சட்டா எச்டிடியை பொருத்திக் கொள்ளலாம்.

இந்த லேப்டாப்புகளின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. விரைவில் விற்பனைக்கு வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X