பல்வகை பயன்பாட்டு வசதிகளுடன் புதிய நெட்புக்!

Posted By: Karthikeyan
பல்வகை பயன்பாட்டு வசதிகளுடன் புதிய நெட்புக்!

எம்எஸ்ஐ நிறுவனம் சமீபத்தில் தனது புதிய நெட்புக்கை அறிமுகம் செய்திருக்கிறது. இந்த புதிய நெட்புக்கிற்கு யு180 என்ற பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இந்த நெட்புக் பயணத்திற்கு உற்ற தோழனாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நெட்புக் பல ஏராளமான தொழில் நுட்பங்களுடன் வருகிறது. குறிப்பாக இந்த நெட்புக் 1024 x 600 பிக்சல் ரிசலூசனுடன் 10.1 இன்ச் திரையைக் கொண்டிருக்கிறது. அதோடு ஏஞ்சல் வெள்ளை, ஷைனி கருப்பு மற்றும் லாவண்டர் பர்ப்புள் போன்ற வண்ணங்களில் வந்து பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கிறது.

அடுத்ததாக இந்த நெட்புக் 3 செல் லித்தியம் ஐயன் 2200 எம்எஹெர்ட்ஸ் பேட்டரியைக் கொண்டிருப்பதால் இது மிக உறுதியாக இருக்கும். அதே நேரத்தில் நீண்ட இயங்கு நேரம் கொண்டிருக்கும்.

இதன் இயங்குதளம் ஜெனியூன் விண்டோஸ் 7 ஆகும். மேலும் இன்டல் ஆட்டம் ப்ராசஸர் மற்றும் இன்டல் சிப்செட் ஆகியவற்றை இந்த நெட்புக் கொண்டிருக்கிறது. கேமராவைப் பொருத்தமட்டில் இந்த நெட்புக் 3எம்பி முகப்புக் கேமராவை மட்டும் கொண்டுள்ளது.

இதன் மொத்த சேமிப்பு 1ஜிபி ஆகும். இதை 320 ஜிபி வரை அதிகரிக்க முடியும். இணைப்பு வசதிக்காக இந்த நெட்புக் வைபை, ப்ளூடூத், மற்றும் யுஎஸ்பி 2.0 போன்றவற்றைக் கொண்டுள்ளது.

இந்த நெட்புக் ஒரு சிறந்த பொழுதுபோக்கு சாதனமாகவும் இருக்கும். ஏனெனில் இந்த நெட்புக்கில் வீடியோ கேம்களை மிக அருமையாக விளையாட முடியும். அதோடு இது எல்லாவிதமான ஆடியோ மற்றும் வீடியோ பார்மட்டுகளை சப்போர்ட் செய்வதால் சூப்பராக இசை மற்றும் படங்கள் ஆகியவற்றை தடையின்றி அனுபவிக்க முடியும். மேலும் 2 ஸ்பீக்கர்கள் மற்றும் ஆடியோ ஜாக்கும் உள்ளன.

மேற்சொன்ன சிறப்புகள் கொண்ட இந்த நெட்புக்கின் விலை ரூ. 24000 ஆகும்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot