Home
Computer

அற்புத வீடியோ கேம் அனுபவத்தை தரும் புதிய எம்எஸ்ஐ லேப்டாப்புகள்!

By Karthikeyan
 அற்புத வீடியோ கேம் அனுபவத்தை தரும் புதிய எம்எஸ்ஐ லேப்டாப்புகள்!

இதுவரை எம்எஸ்ஐ நிறுவனம் பல தரமான லேப்டாப்புகளையும கணினிகளையும் அறிமுகப்படுத்தி இருக்கிறது. அந்த வரிசையில் இப்போது அந்நிறுவனம் புதிதாக ஜிடி783 மற்றும் ஜிடி783ஆர் என்ற இரண்டு புதிய வீடியோ கேம் லேப்டாப்புகளை அறிமுகப்படுத்தி இருக்கிறது.

இந்த இரண்டு லேப்டாப்புகளின் இயங்குதளம் விண்டோஸ் 7 ஆகும். அதுபோல் இந்த இரண்டு லேப்டாப்புகளும் 2.2 ஜிஹெர்ட்ஸ் கடிகார வேகம் கொண்ட இன்டல் கோர் ஐ7-2670க்யுஎம் ப்ராசஸரைக் கொண்டுள்ளன.

இந்த இரண்டு லேப்டாப்புகளும் 17.3 இன்ச் அளவுள்ள டிஸ்ப்ளே கொண்டு அவை 1920 x 1080 பிக்சல் ரிசலூசனை வழங்குகின்றன. க்ராபிக்ஸ் வேலைகளுக்காக இரண்டுமே க்ராபிக்ஸ் கார்டு மற்றும் என்விடியா ஜிஇபோர்ஸ் ஜிடெக்ஸ் 250எம் கொண்டுள்ளன.

ஹார்டு டிஸ்க்கின் மெமரியைப் பார்க்கும் போது ஜிடி783 லேப்டாப் ஹார்ட் ட்ராவை + எஸ்எஸ்டி கொண்டு 750 ஜிபி + 128 ஜிபி சேமிப்பு வசதியை வழங்குகிறது. அதே நேரத்தில் ஜிடி783ஆர் இரண்டு 7200 ஆர்பிஎஸ் ஹார்ட் டிஸ்க்குகளைக் கொண்டு 1.5 டிபி சேமிப்பு வசதியை வழங்குகிறது.

ஜிடி783ன் ரேம் 12 ஜிபி மெமரியையும் அதே நேரத்தில் ஜிடி783ஆரின் ரேம் 16ஜிபி மெமரியையும் வழங்குகிறது. மேலும் இந்த இரண்டுமே ப்ளூ-ரே டிஸ்க் பர்னர் மற்றும் பேக்லைட் கீபோர்டு ஆகிய வசதிகளை வழங்குகின்றன.

இந்த இரண்டு லேப்டாப்புகளுமே வீடியோ கேமை மையப்படுத்தி வருகின்றன. இவற்றின் டிசைன் மிக உறுதியாக உள்ளன. மேலும் கட்டிங் எட்ஜ் தொழில் நுட்பமும் இந்த லேப்டாப்புகளில் உண்டு. இவற்றின் கீபோர்டுகள் மற்றும் அவற்றின் பட்டன்கள் வீடியோ கேம் விளையாடுவதற்கு மிக அருமையாக இருக்கும்.

இரண்டு டேப்லெட்டுகளும் ஏறக்குறைய ஒரே அளவிலான சிறப்பு வசதிகளை வழங்குகின்றன. இவற்றிற்கு இடையே உள்ள வேறுபாடுகள் மிகக் குறைவே. மேலும் இந்த இரண்டுமே மிக வேகமாக இயங்கக்கூடியவை. இந்த இரண்டு வீடியோ கேம் லேப்டாப்புகளின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X