Home
Computer

எம்எஸ்ஐ வழங்கும் புதிய வீடியோ கேம் லேப்டாப்!

By Karthikeyan
எம்எஸ்ஐ வழங்கும் புதிய வீடியோ கேம் லேப்டாப்!

எம்எஸ்ஐ நிறுவனம் சமீபத்தில் ஒரு புதிய லேப்டாப்பை அறிமுகம் செய்திருக்கிறது. இந்த புதிய லேப்டாப்புக்கு ஜிடி70 என்ற பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இது ஒரு 17.3 இன்ச் கொண்டி ஸ்டீல்சீரிஸ் நோட்புக் ஆகும்.

இது ஒரு கேமிங் லேப்டாப் ஆகும். இந்த ஜிடி லேப்டாப் மிகவும் சூப்பரான தொழில் நுட்பங்களுடன் வருகிறது. குறிப்பாக 32ஜிபி ரேம், 1920 x 1080 பிக்சல் ரிசலூசன், 1 x பில்ட்இன் மைக்ரோபோன், 3டி ஸ்டீரியோ சவுண்ட் சிஸ்டம், விண்டோஸ் 7 ஹோம் ப்ரீமியம் 64 பிட் இயங்கு தளம், என்விடியா ஜிஇபோர்ஸ் ஜிடிஎக்ஸ் 670எம் 3ஜிபி ஜிடிடிஆர்5 க்ராபிக்ஸ் கார்டு, 750ஜிபி 7200 ஆர்பிஎம் ஹார்ட் ட்ரைவ், எச்டி மேட் எல்இடி டிஸ்ப்ளே, இன்டல் க்வாட் கோர் ஐ7 ப்ராசஸர் மற்றும் 4 x பில்ட் இன் எச்டி டைன் ஆடியோ ஸ்பீக்கர்கள் என உயர்தர தொழில் நுட்பங்களுடன் இந்த லேப்டாப் களமிறங்குகிறது.

இது ஒரு மிக உறுதியான பலம் வாய்ந்த லேப்டாப் ஆகும். 9 செல் பேட்டரியைக் கொண்டிருப்பதால் இந்த லேப்டாப் நீடித்த இயங்கு நேரத்தைக் கொண்டிருக்கும். மேலும் இது 64ஜிபி எஸ்எஸ்டி ரெய்ட், 7 இன் 1 கார்ட் ரீடர், பிக்பூட் கில்லர் கேமிங் நெட்வொர்க் லேன், ப்ளூ ரே பர்னர், ஜிகாபிட் எர்த்நெட் லேன், 6 எம்பி கேச் மெமரி மற்றும் பல ஏராளமான தொழில் நுட்பங்களுடன் வருகிறது.

இந்த எம்எஸ்ஐ லேப்டாப் ப்ரீ ரிகவரி டிஸ்க்கையும் சப்போர்ட் செய்யும். இந்த லேப்டாப் வலிமையான ப்ராசஸரையும் மற்றும் க்ராபிக்ஸ் ப்ராசஸரையும் கொண்டிருப்பதால் இது அசூரப் பலம் கொண்டிருக்கும். எந்த ஒரு கடினமான வேலையையும் இந்த லேப்டாப்பில் செய்ய முடியும்.

மேலும் இந்த லேப்டாப் கேமிங் அனுபவத்திற்காக ஏராளமான கேம்களையும் மற்றும் கேமிங் நெட்வொர்க்குகளையும் கொண்டிருப்பதால் இதில் முழுக்க முழுக்க விளையாடி மகிழலாம்.

அசூரப் பலத்துடன் வரும் இந்த எம்எஸ்ஐ லேப்டாப்பின் விலை ரூ.100000 ஆகும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X