Home
Computer

இந்தியவில் கில்லி ஆட வரும் எம்எஸ்ஐயின் புதிய லேப்டாப்

By Super
இந்தியவில் கில்லி ஆட வரும் எம்எஸ்ஐயின் புதிய லேப்டாப்
நாம் வாழும் காலத்தை வீடியோ கேமிங் காலம் என்று சொல்லலாம். அந்த அளவிற்கு இளையோர் வீடியோ கேம்களில் மோகம் கொண்டு இருக்கின்றனர். அதனால் அவர்கள் கணனிகளிலும், மொபைல்களிலும், லேப்டாப்புகளிலும் மற்றும் வீடியோ கேம் மையங்களிலும் அதிகமான பணத்தை செலவழித்து வீடியோ கேம்களை விளையாடுகின்றனர்.

இப்போது அவர்களின் இந்த மோகத்திற்கு தீர்வு காண்பதற்காகவே எம்எஸ்ஐ நிறுவனம் புதிய தொழில் நுட்பத்துடன் கூடிய எல்லா விதமான வீடியோ கேம் வசதிகளை உள்ளடக்கிய புதிய லேப்டாப்பை இந்தியாவில் அறிமுகப்படுத்தவிருக்கிறது. இந்த புதிய லேப்டாப்பின் பெயர் எம்எஸ்ஐ ஜிடி80டிஎக்ஸ் 17.3 ஆகும். இந்த புதிய லாப்டாப்பில் வீடியோ கேம்கள் விளையாடும் போது மிக ஒரு அற்புதமான அனுபவம் கிடைக்கும் என்று எம்எஸ்ஐ நிறுவனம் நம்புகிறது.

எம்எஸ்ஐ ஜிடி80டிஎக்ஸ் 17.3 வீடியோ விளையாட்டுக்களுக்காகவே உருவாக்கப்படுகிறது. இதன் டிஸ்ப்ளே மிக அகலமாகவும், தரமாகவும் எல்இடி பேக்லைட்டும் கொண்டுள்ளது. மேலும் இந்த லேப்டாப் நிவிடியா ஜிஇபோர்ஸ் ஜிடிஎஸ் 570 எம் க்ராபிக்ஸ் கார்ட் கொண்டுள்ளதால் இது 1.5 ஜிபி மெமரி வரை சப்போர்ட் செய்யும்.

வேகமான மற்றும் சிறந்த செயல்பாட்டிற்காக 2ஜிஎச் இன்டல் கோர்7-2630க்யுஎம் ப்ராசஸரைக் கொண்டுள்ளது. எம்எஸ்ஐ ஜிடி80டிஎக்ஸ் 17.3 மற்ற லேப்டாப்புகளிலிருந்து மாறுபட்டு தனித்துவத்தோடு அதாவது ஏராளமான விளையாட்டு வசதிகளை வழங்குகிறது.

குறிப்பாக டிவிடி ரைட்டரிலிருந்த ப்ளூ-ரே ரீடருக்கு அப்க்ரேட் செய்யும் வசதி இந்த லாப்டாப்பில் தான் உண்டு. அடுத்ததாக இதந் 2.1 சானல் டைன்ஆடியோ ஒலி அமைப்பு அனைவரின் உள்ளங்களையும் கவரக்கூடியதாக இருக்கும். இந்த லேப்டாப்பி்ல் சிறந்த டிஜிட்டல் ஒலி அமைப்புடன் ஆம்பியன்ஸ் உள்ளதால் வீடியோ கேம் விளையாடுபவர்களுக்குக் கொண்டாட்டமாக இருக்கும்.

இந்த புதிய லாப்டாப்பில் உள்ள வைபை மற்றும் ப்ளூடூத் தகவல் பரிமாற்றங்களைச் சிறப்பாகச் செய்யும். மேலும் பலவிதமான அளவுகளில் இந்த லேப்டாப் போர்ட்களை வழங்குவதால் நாம் யுஎஸ்பி கார்டை அது எந்த அளவில் இருந்தாலும் தொடர்புபடுத்த முடியும்.இதன் கீபேட் டைப் செய்வதற்கு மிக எளிதாக இருக்கும். மேலும் மல்டிமீடியாவிற்காக ஏராளமான கீகளை இந்த புதிய லேப்டாப் வழங்குகிறது.

எம்எஸ்ஐ ஜிடி80டிஎக்ஸ் 17.3 வீடியோ கேம் விளையாட்டுப் பிரியர்களின் சொர்க்கமாக இருக்கும் எந நம்பலாம். விரைவில் இந்தியாவிற்கு வரவிருக்கும் இந்த புதிய லேப்டாப்பின் விலை ரூ.1,25,000விலையில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X