Home
Computer

அதிக செயல்திறன் கொண்ட பிராசஸருடன் வரும் எம்எஸ்ஐ நோட்புக்குகள்

By Super
அதிக செயல்திறன் கொண்ட பிராசஸருடன் வரும் எம்எஸ்ஐ நோட்புக்குகள்
அதிவேக செயல்திறன் கொண்ட பிராசஸர்களுடன் 4 புதிய நோட்புக் மாடல்களை விரைவில் எம்எஸ்ஐ விற்பனைக்கு கொண்டு வருகிறது. மேலும், நவீன தொழில்நுட்ப அம்சங்கள் நிறைந்த எப் வரிசை லேப்டாப்பையும் துபாய் ஜிடெக்ஸ் 2011 தொழில்நுட்ப கண்காட்சியில் அறிமுகப்படுத்தியது.

இந்த புதிய நோட்புக்குகளில் இடம்பெற்றிருக்கும் பிராசஸர்கள் கடந்த9ந் தேதி முதல் 13ந் தேதி வரை துபாயில் நடந்து முடிந்த மாபெரும் தொழில்நுட்ப கண்காட்சியில் ஏஎம்டி, என்விடிஏ மற்றும் இன்டெல் நிறுவனங்களால் அறிமுகப்படுத்தப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த புதிய தொழில் நுட்பங்கள் கொண்ட ப்ராசஸர்களை எம்எஸ்ஐ லேப்டாப்புகளில் நாம் காணலாம். ஆனால் அவற்றின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை.இதில், எம்எஸ்ஐ ஜி வரிசையில் ஜிடி683ஆர், ஜிடி780ஆர் மற்றும் ஜிடி780 ஆகியவற்றையும் எப் வரிசையில் எப்எக்ஸ்420 மற்றும் எப்எக்ஸ்620டிஎக்ஸ் ஆகியவற்றையும், எக்ஸ் வரிசையில் எக்ஸ்460டிஎக்ஸ் மற்றும் எக்ஸ்730யையும் மேலும் சி வரிசையில் சிஎக்ஸ்480 மற்றும் சிஎக்ஸ்640 போன்றவற்றை அறிமுகப்படுத்துகிறது.

எம்எஸ்ஐயின் ஜி வரிசை லேப்டாப்புகள் என்விடியாவின் நவீன க்ராபிக்ஸ் கார்டுடன் வருகின்றன. அதே நேரத்தில் எக்ஸ்460டிஎக்ஸ் 2ஜி இண்டல் கோர் ஐ ப்ராசஸரைப் பெற்றுள்ளது. இது ஒரு மெல்லிய லேப்டாப்பாகும். மேலும் இதில் வெப்பமில்லா தொழில் நுட்பமும் உள்ளது. இண்டல் கோர் ஐ தொழில் நுட்பம் இந்த எக்ஸ்460டிஎக்ஸ் லேப்டாப்புக்கு சூப்பரான் செயல் திறனை வழங்குகிறது. அதுபோல் சிஎக்ஸ்480ல் இண்டலின் புதிய தலைமுறை சிபியு உள்ளது.

எம்எஸ்ஐன் ஜி வரிசை லேப்டாப்புகள் 2ஜி க்வா் கோர் கோர் ஐ7 ப்ராசஸர் கொண்டு என்விடியா க்ராபிக் கார்டையும் கொண்டுள்ளது. இதனால் இந்த ஜி வரிசை லேப்டாப்புகளில் வீடியோ கேம் விளையாடுவது மிக ஆனந்தமாக இருக்கும். இதன் கீபோர்டும் விளையாடுவதற்கு ஏற்றார்போல உள்ளது. இதில் மல்டி மீடியா அனுபவத்திற்கும் உத்திரவாதம் உள்ளது. ஏனெனில் இதில் சிறந்த ரிசலூசன் கொண்ட திரை, முழுமையான எச்டி, டைன்ஆடியோ மற்றும் டிஎச்எக்ஸ் ட்ரூஸ்டூடியோ ராப்ரவுண்ட சவுண்ட் போன்ற அத்தனை வசதிகளும் உள்ளன.

எம்எஸ்ஐன் சிஎக்ஸ்480 மற்றும் சிஎக்ஸ்640 லேப்டாப்புகள் எஸ்ஆர்எஸ் பிசி சவுண்டை வழங்குகின்றன. அதனால் நாம் ஹெட்செட்டுகளைப் பயன்படுத்தினாலும் அல்லது ஸ்பீக்கர்களைப் பயன்படுத்தினாலும் இதன் இசை மிக அருமையாக இருக்கும்.

அடுத்ததாக சி வரிசையில் வரும் லேப்டாப்புகளில் டைம் ஸ்டேம் சாப்ட்வேர் உள்ளது. இது ஒரு மிகப் பெரிய தகவல் சேமிப்பு கருவியாகும். இதை க்ளிக் செய்தவுடன் நாம் சேமித்தவற்றை சில நொடிகளில் நாம் காண முடியும். இந்த சாப்ட்வேரை ஆட்டோமேட்டிக் மோடில் வைத்துவிட்டால போதும். இது எல்லா வேலைகளையும 10 விநாடிகளில் முடித்துவிடும். இந்த சி வரிசை லேப்டாப்புகள் 2ஜி கோர் ஐ இண்டல் ப்ராசஸர்கள் கொண்டிருக்கின்றன. அதே நேரத்தில் என்விடியாவின் ஜிஇபோர்ஸ் க்ராபிக்ஸ் கார்டையும் கொண்டுள்ளன.

எம்எஸ்ஐன் எக்ஸ் வரிசை 13.4 இன்ச் எக்ஸ்370 லேப்டாப் 1.4 கிலோ எடையும் 14 இன்ச் எக்ஸ்460டிஎக்ஸ் லேப்டாப் 1.9 கிலோ எடையும் கொண்டுள்ளன. இவற்றின் தடிமன் 1 இன்ச்சிக்கும் குறைவே. அதனால் இதை பயணத்தின்போது எளிதாகத் தூக்கிச் செல்லலாம். அதே நேரத்தில் இதன் பேட்டரி 8 மணி நேரம் தாங்கும் சக்தியைக் கொண்டது. எக்ஸ்370ல் எஎம்டி டூவல் கோர் ப்ராசஸரும் எக்ஸ்460டிஎக்ஸில் இன்டலின் 2ஜி கோர் ஐ சிபியும் உள்ளன.

ஜிடெக்ஸ் 2011ல் எம்எஸ்ஐ முதல் முறையாக எப் வரிசை லேப்டாப்புகளை அறிமுகப்படுத்தியது. இவை புதிய நவீன ஹார்ட்வேர் மற்றும் சாப்ட்வேர

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X