மவுஸ் லேப்டாப்...சிறப்புகள் ஏராளம், தொழில் நுட்பம் அபாரம்!

Posted By: Staff
மவுஸ் லேப்டாப்...சிறப்புகள் ஏராளம், தொழில் நுட்பம் அபாரம்!
மவுஸ் கம்யூட்டர்ஸ் நிறுவனம் மேசை கணினி மற்றும் லேப்டாப்புகளைத் தயாரித்து வழங்குவதில் முன்னனியில் இருக்கிறது. அந்நிறுவனத்தின் தயாரிப்புகள் எப்போதுமே அமர்க்களமாக இருக்கும். அந்த வகையில் அந்நிறுவனம் புதிதாக ஹலோ கிட்டி கிட் லுவ்புக் எஸ் என்ற புதிய லேப்டாப்பை அறிமுகம் செய்கிறது.  இந்த புதிய லேப்டாப் பார்ப்பதற்கும் மிக பக்காவாக இருக்கிறது.

இந்த லவ்புக் எஸ் லேப்டாப் அலுமினியத் தகட்டால் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் சிவப்பு நிறம் இந்த லேப்டாப்புக்கு அதிக கவர்ச்சியைத் தருகிறது. இதன் மேல் 1100 ஸ்வாரோவ்ஸ்கி கற்களால் செய்யப்பட்ட ஹலோ கிட்டி முகத்தின் முத்திரப் பதிக்கப்பட்டுள்ளது. இந்த லவ்புக் எஸ் லேப்டாப் மவுஸ் கம்யூட்டர்ஸ் மற்றும் சேன்ரியோ ப்ரான்ட் ஹலோ கிட்டி ஆகியவற்றின் கூட்டணியில் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த லவ்புக் எஸ் லேப்டாப் ஏராளமான சிறப்புகளை கொண்டிருக்கிறது. இந்த லேப்டாப் 1366 x 768 பிக்சல் ரிசலூசன் கொண்ட 11.6 இன்ச் டிஸ்ப்ளேயைக் கொண்டுள்ளது. 2.20ஜிஹெர்டஸ் கொண்ட இதன் இன்டல் கோர் ஐ3-2330எம் டூவல் கோர் ப்ராசஸர் இதற்கு சரியான வேகத்தைக் கொடுக்கிறது.

இது இன்பில்ட் இன்டெல் எச்டி 3000 கிராபிக்ஸ் கார்டைக் கொண்டுள்ளது. இதன் ரேமைப் பார்த்தால் அது 4ஜிபி கொண்ட டிடிஆர் ரேம் ஆகும். மேலும் 5400 ஆர்பிஎம் ஹார்ட் ட்ரைவுடன் 500ஜிபி எச்டிடி சேமிப்பைக் கொண்டுள்ளது.

ப்ளூடூத் மற்றும் 802.11 பி/ஜி/என் வைஃபை வசதிகளை வழங்குகிறது. இது ஒரு யுஎஸ்பி 3.0 போர்ட் மற்றும் 2 தரமான யுஎஸ்பி 2.0 போர்ட்டும் இதில் அடக்கம். ஹெட்போன் மற்றும் மைக்ரோபோன் ஜாக்குகளும் இந்த லேப்டாப்பை அலங்கரிக்கின்றன. இது விண்டோஸ் 7 ஹோம் ப்ரீமியம் 64பிட் இயங்கு தளத்தைக் கொண்டுள்ளது.

லவ்புக் எஸ் லேப்டாப்பின் எடை 1.5 கிலோவாகும். இதன் தடிமன் 36மிமீ ஆகும். இதன் பேட்டரி 5.3 மணி நேர இயங்கு நேரத்தை வழங்குகிறது. மேலும் இது சன் 24 x 365 போன் சப்போர்ட்டை 1 வருட உத்திரவாதத்துடன் வழங்குகிறது.

விலையைப் பார்த்தால் ஐ3 ப்ராசஸருடன் கூடிய லவ்புக் எஸ் லேப்டாப் ரூ.30,000க்கு விற்கப்படுகிறது. முதலில் ஜப்பானில் களமிறங்கியிருக்கும் இந்த லேப்டாப் விரைவில் உலகம் முழுவதும் தனது பயணத்தை விரைவில் ஆரம்பிக்க உள்ளது. ஐ7 ப்ராசஸருடன் வரும் லவ்புக் எஸ் லேப்டாப் ரூ.45,000க்கு வருகிறது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்