Home
Computer

புதிய அப்டேட் பெறும் மோட்டோரோலா ஸூம் டேப்லெட்!

By Karthikeyan
புதிய அப்டேட் பெறும் மோட்டோரோலா ஸூம் டேப்லெட்!

மோட்டோரோலா நிறுவனம் தனது மோட்டோரோலா எக்சூம் டேப்லெட்டுகளில் 4ஜி எல்டிஇ வசதியை அப்டேட் செய்வதை வரும் மார்ச் இறுதியில் நிறுத்த முடிவெடுத்திருக்கிறது. இந்த அப்டேட்டை இன்னும் செய்யாத வாடிக்கையாளர்களை இந்த மார்ச்சுக்கள் செய்யது முடிக்குமாறு மோட்டோரோலா அறிவிப்பு கொடுத்திருக்கிறது.

மோட்டோரோலா தனது எக்சூம் டேப்லெட்டை கடந்த 2011ல் அறிமுகம் செய்தது. அப்போது இந்த டேப்லெட்டில் 4ஜி வசதிகள் இல்லை. ஆனால் அதன் விற்பனையை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக விரைவில் இந்த டேப்லெட்டில் 4ஜி வசதிகள் அப்டேட் செய்யப்படும் என மோட்டோரோலா அறிவித்திருந்தது. தான் அறிவித்ததை இப்போது மோட்டோரோலா செய்து வருகிறது. எனவே மோட்டோரோலா எக்சூம் டேப்லெட் வாடிக்கையாளர்கள் மோட்டோராலோ சேவை மையத்திற்கு சென்று இந்த அப்டே்டைச் செய்து கொள்ளலாம்.

இதன் மூலம் இந்த வாடிக்கையாளர்கள் இந்த மோட்டோரோலா எக்சூம் டேப்லெட்டில் 4ஜி எல்டிஇ வசதிகளை அனுபவிக்கலாம். ஆகவே இதுவரை அப்டேட் செய்யாத வாடிக்கையாளர்கள் இந்த மாத இறுதிக்குள் அப்டேட் செய்யுமாறு அறிவுருத்தப்படுகிறார்கள்.

இந்த மோட்டோரோலா எக்சூம் டேப்லெட்டின் முக்கிய சிறப்புகளைப் பார்த்தால் இந்த டேப்லெட் 10.1 இன்ச் திரையைக் கொண்டிருக்கிறது. இந்த திரை 800 x 1280 பிக்சல் ரிசலூசனை வழங்குகிறது. இந்த திரை டிஎப்டி கப்பாசிட்டிவ் தொடு திரையாக இருப்பதால் இது மல்டி டச் கட்டளைகளை சப்போர்ட் செய்கிறது.

இந்த கேமரா 2 கேமராக்களைக் கொண்டுள்ளது. இதன் பின்பக்க கேமரா 5 மெகா பிக்சலையும் அதே நேரத்தில் முகப்பு கேமரா 2 மெகா பிக்சலையும் கொண்டிருக்கிறது. மேலும் இந்த டேப்லெட் என்விடியா டேக்ரா 2 டி20 சிப்செட் மற்றும் 1 ஜிஹெர்ட்ஸ் வேகம் கொண்டடூவல் கோர் கோர்டெக்ஸ்-எ9 ப்ராசஸரைக் கொண்டிருக்கிறது. மேலும் இந்த டேப்லெட் 16ஜிபி, 32ஜிபி மற்றும் 64 ஜிபி மெமரி என வருகிறது. இதன் ரேம் 1ஜிபி ஆகும். மேலும் இதில் எஸ்டி கார்டு ஸ்லாட்டும் உண்டு.

ஏறக்குறைய நிறையப் பேர் இந்த அப்டேட்டை ஏற்கனவே செய்து விட்டதால் மோட்டோரோலா சேவை மையத்தில் மக்கள் கூட்டம் இப்போது குறைவாகவே இருக்கிறது. ஆகவே இப்போது அப்டேட் செய்தால் விரைவில் செய்து முடித்துவிட்டு வரலாம். ஏனெனில் இதன் அப்டேட் தொடங்கியபோது 2 வாரங்கள்கூட ஆனது. ஆனால் இப்போது அப்படி இல்லை. மேலும் வேரிசானின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை நாடினால் இன்னும் வசதியாக இருக்கும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X