Home
Computer

சூப்பர் கேமராவுடன் வரும் மோட்டோரோலா டேப்லட்டுகள்

By Super
சூப்பர் கேமராவுடன் வரும் மோட்டோரோலா டேப்லட்டுகள்
இந்திய ஆண்ட்ராய்டு சந்தையில் மோட்டோரோலா நிறுவனம் தனது இடத்தை மேலும் மேலும் உறுதிப்படுத்த தனது படைப்புகளை தினமும் அப்டேட் செய்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் மோட்டோரோலா பலதரப்பட்ட அளவு திரைகளில் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை விரைவில் அறிமுகப்படுத்த இருக்கிறது.

அதாவது ஆண்ட்ராய்டு ஹணிகோம்ப் வெர்சனில் இயங்கும் 8 இஞ்ச் மற்றும் 10 இஞ்ச் அளவுள்ள டிஸ்ப்ளே கொண்ட புதிய டேப்லட்டுகளை மோட்டோரோலா அறிமுகப்படுத்த இருக்கிறது.

அந்த இரண்டும் பொதுவாக ப்ளமிங் என்று அழைக்கப்பட்டாலும் அவற்றில் ஒன்று ப்ளமிங் எமரா என்று அழைக்கப்படுகிறது. இரண்டிற்கும் 4ஜி எல்டிஇ சிப் உள்ளது. மேலும் இந்த இரண்டு டேப்லட்டுகளின் பின்புறமும் ஸ்குரு மூலம் இணைக்கக் கூடிய பேனல் உள்ளது.

இந்த இரண்டுமே பார்ப்பதற்கு மிக அட்டகாசமாக இருக்கின்றன. அதேபோல் என்ட்கெஜட்டிலிருந்து மேலும் ஒரு புதிய செய்தி 2 வாரங்களுக்கு முன்பு வந்திருக்கிறது. அதாவது மோட்டோரோலா நிறுவனம் மோட்டோரோலா சூம் டேப்லட்டின் அடுத்த வேர்சனாக சூம் 2 என்ற புதிய டேப்லட்டை அறிமுகப்படுத்த இருக்கிறது என்பதாகும்.

8 இன்ச் ப்ளமிங் எமரா டேப்லட் ஒரு தனித்துவம் வாய்ந்ததாகும். அதாவது இது ரியர் மற்றும் முகப்பு கேமரா என 2 கேமராக்களைக் கொண்டுள்ளது. ஆனால் இதன் மற்ற சிறப்புகள் நமக்கு இன்னும் கிடைக்கவில்லை. 10 இன்ச் ப்ளமிங் கேமரா லேண்ட்ஸ்கேப் வடிவில் உள்ளது.

இரண்டுமே ஆண்டிக்ளேர் மற்றும் கீறல் தடுப்பு வசதிகளைக் கொண்டிருக்கின்றன. இவற்றின் ரியர் கேமராவில் எச்டி வீடியோ ரிக்கார்டிங் மிக பக்காவாக இருக்கும். இவற்றின் கேமராக்கள் 5 மெகா பிக்ஸல் அல்லது 8 மெகா பிக்ஸலாக இருக்கலாம் என்று பலவிதமான செய்திகள் வருகின்றன.

இந்த இரண்டு ப்ளமிங் டேப்லட்டுகளின் பின்புறம் ஸ்டார்ட், ஸ்லீப் மற்றும் சட்டவுன் பட்டன்கள் உள்ளன. அதாவது இவை வால்யூம் கண்ட்ரோலுக்கு பின்புறம் உள்ளன. இவை கருப்பு மற்றும் வெள்ளை வண்ணங்களில் விரைவில் சந்தைக்கு வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X