அலுவலக பணிகளை எளிதாக்கும் மோட்டோரோலா நெட்புக்

Posted By: Staff

அலுவலக பணிகளை எளிதாக்கும் மோட்டோரோலா நெட்புக்
அலுவலகப் பணிகளை எளிதாக்கும் வசதிகளுடன் புதிய நெட்புக்கை மோட்டோரோலா அறிமுகப்படுத்தியுள்ளது.

லேப்டாக் என்ற பெயரில் வரும் இந்த நெட்புக் 10.1 இன்ச் அகலத் திரை கொண்டு தரமான் ரிசலூசனுடன் வருகிறது. இதன் முக்கிய சிறப்பு என்னவென்றால் இதன் கீபோர்டுகள் ஆண்ட்ராய்டு கீகளுடன் வருகின்றன.

இதனால் இதில் வேலை செய்வது மிக எளிது. மேலும் இதில் உயர்தரமான கிரிஸ்டல் க்ளியர் ஆடியோவும் உள்ளது. இதன் டச் பேட் மல்டி டாஸ்க் வசதி கொண்டது.

இந்த புதிய லேப்டோக்கில் ஒரே நேரத்தில் பல விண்டோஸ்களை வீயூவ் செய்ய முடியும். இதில் இசை கேட்கலாம், படம் பார்க்கலாம். மற்றும் இமெயில் அனுப்பலாம்.

மோட்டோரோலா லேப்டோக் அடோப் ப்ளாஷ் மற்றும் குயிக் ஆபீஸ் கொண்டுள்ளதால் இதில் நமது ப்ராஜக் வேலைகளை எளிதாகச் செய்ய முடியும். அதே போல் டாக்குமென்டுகளை எடிட் செய்ய முடியும். பிரண்ட செய்ய முடியும். அதே நேரத்தில் பகிர்ந்து கொள்ளவும் முடியும்.

இந்த மோட்டோரோலா கனணியைப் போன்று பைல் மேனேஜரைக் கொண்டுள்ளது. அதனால் பைல்களை காபி செய்ய முடியும் அதுபோல் அவற்றை அழிக்கவும் செய்ய முடியும். மேலும் இதில் வெவ்வேறான 2 யுஎஸ்பி போர்ட்டுகள் உள்ளதால் இதில் மற்ற டிவைஸ்களையும் இணைக்க முடியும்.

இந்த மோட்டோரோலா லேப்டோக் முதலில் அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்படும். அதன் பின் மற்ற நாடுகளுக்கு வரும். ஆனால் இதன் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot