Home
Computer

6 வருட கியாரண்டியுடன் மோட்டோ டேப்லட்.. இதைவிட என்ன வேணும்!

By Super

6 வருட கியாரண்டியுடன் மோட்டோ டேப்லட்.. இதைவிட என்ன வேணும்!
சந்தைக்கு ஏராளமான டேப்லெட்டுகள் வந்தாலும், ஒரு சில டேப்லெட்டுகள் மட்டுமே வர்த்தக பயன்பாட்டிற்கு உதவுகின்றன. மற்றவை படம் பார்ப்பதற்கும், வீடியோ கேம் விளையாடுவதற்கும் மட்டுமே பயன்படுகின்றன. ஆனால் தற்போது மோட்டோரோலா நிறுவனம் வர்த்தகப் பயன்பாட்டிற்காக மோட்டோரோலா இடி1 என்ற புதிய டேப்லெட்டைக் களமிறக்குகிறது.

இந்த மோட்டோரோலா இடி1 டேப்லெட் ஏராளமான சிறப்புகளைக் கொண்டுள்ளது. அதாவது 1 ஜிஹெர்ட்ஸ் கடிகார வேகம் கொண்ட டூவல் கோர் ஒஎம்எபி4 பிராசஸரைக் கொண்டுள்ளது. இயங்கு தளம் ஆன்ட்ராய்டு 2.3.4 ஜிஞ்சர்ப்ரீட் ஆகும். திரையை எடுத்துக் கொண்டால் அது மல்டி டச் வசதி கொண்ட 7 இன்ச் கெப்பாசிட்டிவ் தொடு திரையைக் கொண்டுள்ளது. இந்த திரையின் பிக்சல் ரிசலூசன் 1024 x 600 ஆகும்.

கேமராவைப் பொறுத்தமட்டில் இந்த டேப்லெட் ஆட்டோ போக்கஸ் மற்றும் எல்இடி ப்ளாஷ் கொண்ட 8 மெகா பிக்சல் கேமராவைக் கொண்டுள்ளது. அதுபோல் இதன் வீடியோ கால் கேமரா விஜிஏ ரிசலூசன் கொண்டு வருகிறது. இந்த கேமரா 720பி வீடியோ ரிக்கார்டிங்கை சப்போர்ட் செய்யும். இதில் உள்ள மல்டி மீடியா ப்ளேயர் எல்லா விதமான ஆடியோ மற்றும் வீடியோ பைல்களை சப்போர்ட் செய்யும்.

இந்த மோட்டோரோலா இடி1 டேப்லெட்டில் ஒரு அருமையான எப்எம் ரேடியோ உள்ளது. அதுபோல் 3.5 மிமீ ஆடியோ ஜாக்கும் உள்ளது. இதன் ரேம் 1ஜிபி அளவு கொண்டது. இதன் மொத்த இன்பில்ட் மெமரி 4ஜிபி ஆகும். இந்த மெமரியை 32ஜிபி வரை விரிவுபடுத்த முடியும்.

இணைப்பு வசதிகளைப் பொருத்த வரையில் இந்த டேப்லெட் ப்ளூடூத், வைஃபை, எச்டிஎம்ஐ போர்ட் மற்றும் யுஎஸ்பி போர்ட் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இதன் பேட்டரியின் மின் திறன் 4620 எம்ஏஎச் ஆகும். இந்த டேப்லெட்டின் மொத்தப் பரப்பு 130.5 மிமீ x 246.3 மிமீ x 223.9 மிமீ ஆகும். இந்த மோட்டோரோலா டேப்லெட்டின் மொத்த எடை 630 கிராம் ஆகும்.

இந்த மோட்டோரோலா இடி1 டேப்லெட் கருப்பு நிறத்தில் பார்ப்பதற்கு மிக அழகாக உள்ளது. இதன் பின்புறம் கைப்பிடியும் உள்ளதால் இதை கையில் வைத்திருப்பது மிக எளிதாக இருக்கும்.

இந்த இடி1 டேப்லெட்டின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. வரும் புத்தாண்டு தொடக்கத்தில் களமிறங்கும் என நம்பலாம். மேலும் இது 3 வருட உத்திரவாதத்துடன் வருகிறது. இந்த உத்திரவாதத்தை மேலும் 3 வருடம் நீட்டிக்க முடியும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X