Home
Computer

மார்க்கெட்டை மிரட்ட வரும் மோட்டோ டேப்லெட்டுகள்!

By Super

மார்க்கெட்டை மிரட்ட வரும் மோட்டோ டேப்லெட்டுகள்!
லேப்லெட் சந்தைக்கு பல விதமான டிவைஸ்கள் வந்து கொண்டே இருக்கின்றன. டேப்லெட்டுகளின் தேவை அதிகமாக இருப்பதால் டேப்லெட் நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு புதிய டேப்லெட்டுகளை நாளுக்கு நாள் அதிகமாக அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கின்றன. அதிலும் குறிப்பாக விளையாட்டு வசதியுள்ள டேப்லெட்டுகளுக்கு அதிக வரவேற்பு உள்ளது.

இதுவரை மோட்டோரோலா பலவிதமான டேப்லெட்டுகளை அறிமுகப்படுத்தி இருக்கிறது. அவற்றில் மோட்டோரோலா சூம் டேப்லெட் மிகப் பெரிய வெற்றியைக் குவித்தது. தற்போது மோட்டோரோலாவின் டிராய்டு எக்ஸ்ஒய்போர்டு வரிசை டேப்லெட்டுகளில் புதியதாக மோட்டோரோலா டிராய்டு எக்ஸ்ஒய்போர்டு 8.2 என்ற டேப்லெட்டை அறிமுகப்படுத்துகிறது. இந்த புதிய டேப்லெட் கருப்பு நிறத்தில் மிக அழகாக இருக்கிறது. மோட்டோரோலாவின் முத்திரை இதன் உச்சியில் உள்ளது.

மோட்டோரோலா டிராய்டு எக்ஸ்ஒய்போர்டு 2 மாடல்களில் வருகிறது. அதாவது 8.2 இன்ச் மற்றும் 10.1 இன்ச் திரை அளவுகளில் வருகிறது. இந்த இரண்டு மாடல்களும் 16ஜிபி மற்றும் 31ஜிபி சேமிப்பு திறன் வசதியை கொண்டிருக்கும்.

குறிப்பாக 10.1 இன்ச் வெர்சன் 64ஜிபி சேமிப்பு வசதியைக் கொண்டிருக்கும் என்று தெரிகிறது. இந்த டேப்லெட்டுகள் இந்த வாரத்திலேயே சந்தைக்கு வரும் என்று தெரிகிறது. இந்த 2 டேப்லெட்டுகளுமே எல்லா வசதிகளையும் கொண்டிருக்கும். ஆனால் திரை அளவு மட்டுமே மாறுபடும்.

8.2 இன்ச் டேப்லெட் பயன்படுத்துவதற்கு மிக எளிதாக இருக்கும். இந்த திரை கொரில்லா கிளாஸ் கோட்டிங் கொண்டிருக்கும். அதனால் இதில் கீறலோ அல்லது கோடுகளோ சாதாரணமாக விழாது.

மோட்டோரோலா டிராய்டு எக்ஸ்ஒய்போர்டு 8.2ன் சிபியு டெக்ஸாஸ் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ் பர்மைச் சார்ந்தது ஆகும். இதன் ஒஎம்எபி 4430 பிராசஸர் 1200 மெகா ஹெர்ட்ஸ் வேகத்தைக் கொண்டிருக்கும். இந்த டேப்லெட்டின் மொத்த மெமரி 1ஜிபி ஆகும். அதுபோல் இது 32ஜிபி மெமரி சேமிப்பு வசதியைக் கொண்டுள்ளது.

மோட்டோரோலா டிராய்டு எக்ஸ்ஒய்போர்டு 8.2 டேப்லெட் சிடிஎம்ஏ செல்லுலர் நெட்வொர்க்குகளை சப்போர்ட் செய்கிறது. அதுபோல் இது ப்ளூடூத் 2.1ஐ கொண்டுள்ளது. மேலும் யுஎஸ்பி 2.0 இணைப்பையும் வழங்குகிறது. அதோடு வைஃபை இணைப்பும் இதில் உள்ளது.

மோட்டோரோலா டிராய்டு எக்ஸ்ஒய்போர்ட் 8.2ன் விலை இன்னும் தெரியவில்லை. ஆனால் வரும் 8ந் தேதிக்குள் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X