Home
Computer

நீங்க பிசினஸ்மேனா.. உங்களுக்காக ஓர் புதிய டேப்லெட்!

By Karthikeyan
நீங்க பிசினஸ்மேனா.. உங்களுக்காக ஓர் புதிய டேப்லெட்!

மோஷன் கம்யூட்டிங் நிறுவனம் அடுத்த தலைமுறைக்கான புதியதொரு டேப்லெட் கம்ப்யூட்டரை களமிறக்க இருக்கிறது. சிஎல்910 என்று அழைக்கப்படும் இந்த புதிய டேப்லெட் கணினித் துறையில் ஒரு புதிய சகாப்தத்தைப் படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய டேப்லெட் சூப்பரான தொழில் நுட்பங்களுடன் வருகிறது.

விண்டோஸ் 7 ப்ரொபசனல் இயங்கு தளத்தில் இயங்கும் இந்த டேப்லெட் 10.1 இன்ச் அளவில் கெப்பாசிட்டிவ் தொடுதிரையைக் கொண்டுள்ளது. இந்த டேப்லெட்டை இரண்டு விரல்கள் கொண்டு இயக்கலாம். அதோடு இந்த டேப்லெட்டை இயக்க ஒரு உயர் ரிசலூசன் கொண்ட டிஜிடைசர் பேனாவும் வழங்கப்படுகிறது.

இந்த டேப்லெட் இன்டல் ஆட்டம் என்2600 டூவல் கோர் ப்ராசஸரைக் கொண்டிருப்பதால் இது தாறுமாறாக இயங்கும் என்பதில் எந்தவித ஐயமும் தேவையில்லை. 2ஜிபி ரேமுடன் வரும் இந்த டேப்லெட்டில் துணை சேமிப்பிற்காக ஒரு 128ஜிபி சாலிட் ஸ்டேட் ட்ரைவும் உள்ளது.

இணைப்பு வசதிக்காக இந்த டேப்லெட் ப்ளூடூத் 4.0வைக் கொண்டிருக்கிறது. அதோடு பாதுகாப்பிற்காக ட்ரஸ்ட்டட் ப்ளாட்பார்ம் மாடுல் கொண்டு இந்த டேப்லெட் வருவதால் இதை வர்த்தகத்திற்காக பயன்பாடுகளுக்காக அருமையாக பயன்படுத்தலாம். மேலும் தகவல் பரிமாற்றத்திற்காக இந்த டேப்லெட்டில் பார்கோட் ஸ்கேனர் மற்றும் மேக்னட்டிக் ஸ்ட்ரைப் ரீடர் போன்ற வசதிகளும் உள்ளன.

இவற்றைத் தவிர்த்து இந்த டேப்லெட் வைபை, ஜிபிஎஸ் மற்றும் கோபி போன்ற இணைப்பு வசதிகளையும் வழங்குகிறது. அதோடு 3.0எம்பி முகப்பு கேமரா மற்றும் 1.3எம்பி பின்பக்க கேமரா ஆகியவற்றையும் இந்த டேப்லெட் கொண்டிருப்பதால் வீடியோ உரையாடலை அருமையாக இதன் மூலம் நடத்த முடியும்.

இந்த டேப்லெட்டின் பேட்டரி இதற்கு நீடித்த இயங்கு நேரத்தை வழங்குகிறது. அதோடு இது ஒரு உறுதியான டேப்லெட் ஆகும். அதாவது இது கீழே விழுந்தாலும் எளிதில் பாதிப்பு அடைவதில்லை. இந்த புதிய டேப்லெட் ரூ.65,000க்கு விற்கப்படுகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X