பயர்பாக்ஸின் சில சிறப்பு செயல்பாடுகள்...!

Written By:
  X

  இன்று பிரவுசர் வழியே நாம் இணையத்தை தேடுகையில், நாம் செல்லும் தளங்கள் அனைத்தும் பதியப்படுகின்றன. அவை நம் கம்ப்யூட்டரில், நமக்கு இணைய சேவை வழங்கும் நிறுவன சர்வர்களில் இருப்ப தால், மற்றவர்களும் அதனைக் காணும் வாய்ப்பு உள்ளது.

  இதனைத் தடுத்து நம் இணையத் தேடல்களை நாம் மட்டுமே கொள்ளும் வகையில் அந்தரங்கமாக இருக்கவே பல வழிகளைப் பிரவுசர்கள் தருகின்றன. பிரைவேட் பிரவுசிங், இன் காக்னிடோ, டோன்ட் ட்ரேக் மி என இந்த வழிகள் அழைக்கப்படுகின்றன.

  இருந்தாலும் நமக்கு நம் வழிகளை யாரும் அறிந்து கொள்ளாமல் இருக்க இன்னும் சில பாதுகாப்பு வழிகளை அமைக்கலாமே என்று தோன்றும். அந்த வகையில், பயர்பாக்ஸ் பிரவுசர் தரும் வழிகளை இங்கு காணலாம்.

  பயர்பாக்ஸ் பிரவுசரில் கூடுதல் பாதுகாப்பு வழிகள் இருந்தாலும், அவை தானாக அமையாமல், நாம் தேடி அமைக்கும் வகையில் உள்ளன. பயர்பாக்ஸ் பிரவுசரிலும், நாம் தரும் தகவல்கள், மொஸில்லா மற்றும் கூகுள் நிறுவன பிரவுசர்களுக்குச் செல்லும் வகையில் கட்டமைப்பு உள்ளது.

  ஆனால், இது கட்டாயம் இல்லை. மாற்றி அமைக் கலாம். இருப்பினும், இந்த தகவல்கள் பிரவுசரை மேலும் பாதுகாப்பாக, எளிதாக, பயனுள்ளதாக அமைக்க உதவுகின்றன. கெடுதல் விளைவிக்கும் இணைய தளங்களைத் தடுக்கப் பயன் படுத்தப்படுகின்றன என்பதனை யும் நினைவில் கொள்ள வேண்டும்.

  ஸ்மார்ட் போன் கேலரிக்கு

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  #1

  பயர்பாக்ஸ் பிரவுசர், நாம் செல்லும் இணைய தளங்களுக்கு "என்னைப் பின் தொடராதே' (donottrack) என்ற கட்டளையை அனுப்பலாம். ஆனால், மாறா நிலையில், பிரவுசரில் இது இயக்கப் படவில்லை. எனவே நாம் தான் இயக்கி அமைக்க வேண்டும்.

  #2

  பயர்பாக்ஸ் மெனு சென்று, அதில் Options என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் அதில் Privacy என்ற ஐகான் மீது கிளிக் செய்திடவும். இப்போது Privacy பிரிவு கிடைக்கும்.

  #3


  இதில் "Tell websites I do not want to be tracked" என இருக்கும் இடத்தின் முன் உள்ள செக் பாக்ஸில் டிக் அடையாளம் அமைத்து, இயக்கத்தினை அமைக்கவும். இதே வசதி, இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 9, ஆப்பிள் சபாரி ஆகிய பிரவுசர்களில் தரப்பட்டுள்ளது. ஆனால், கூகுள் குரோம் பிரவுசரில், ஏனோ, இது தரப்படவில்லை.

  #4

  பயர்பாக்ஸ் தன் தேடல் கட்டத்தில் அமைக்கும் தேடல் சொற்களின் ஒவ்வொரு எழுத்தையும், மாறா நிலையில் அமைத்துள்ள சர்ச் இஞ்சினுக்கு அனுப்புகிறது.

  இவற்றைப் பெற்றுக் கொண்ட சர்ச் இஞ்சினும்,தேடல் குறித்த சில ஆலோசனைகளையும் தருகிறது. இதனைத் தடுக்கலாம். சர்ச் பாக்ஸில் ரைட் கிளிக் செய்து, அதில் Show Suggestions என்பதில் உள்ள டிக் அடையாளத்தை எடுத்துவிடலாம்

  #5

  பயர்பாக்ஸ் பிரவுசர், கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்களுக்கு எதிராக (phishing and malware) கூகுள் குரோம் பயன்படுத்திடும் அதே தொழில் நுட்பத்தினைப் பயன்படுத்துகிறது. 30 நிமிடத்திற்கு ஒரு முறை, கூகுள் தளத்திலிருந்து, கெடுதலான இணைய தள முகவரிகளைப் பெற்று, அவற்றிலிருந்து நம்மைப் பாதுகாக்கிறது.

  இந்த தளங்களில் ஒன்றை நீங்கள் அணுக முயன்றால், பயர்பாக்ஸ், உங்களைப் பற்றிய தகவல்களையும், தள முகவரியினையும் கூகுள் தளத்திற்கு பயர்பாக்ஸ் அனுப்புகிறது. கூகுள் தளத்தினை மீண்டும் சோதித்து, அதன் கெடுதல் தன்மையை உறுதி செய்கிறது. உங்கள் கம்ப்யூட்டரில் கூகுள் அமைத்துள்ள குக்கீஸ்களும் இவற்றுடன் அனுப்பப் படுகின்றன.

  #6

  இதன் மூலம், கெடுதல் விளை விக்கும் இணைய தளங்கள் வழியாக, உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள பெர்சனல் தகவல்கள் மற்றவர்களுக்குப் போய்ச் சேர்வது தடுக்கப்படுகின்றன. ஆனால், இதனை நீங்கள் விரும்பவில்லை என்றால், இதனையும், Privacy பிரிவு மூலம் தடுத்துவிடலாம்.

  #7

  Privacy பிரிவில், "Firefox will" என்பதில் கிளிக் செய்திடவும். பயர்பாக்ஸ் குக்கீஸ் குறித்து மாற்றங்கள் செய்திட "Use Custom Settings for History" என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பல விளம்பர நெட்வொர்க் நிறுவனங்கள், பல்வேறு இணைய தளங்கள் மூலம், தர்ட் பார்ட்டி குக்கீஸ் புரோகிராம்களைப் பயன்படுத்தி, உங்களுடைய பெர்சனல் தகவல்களைக் கைப்பற்றுகின்றன.

  இவற்றைத் தடுக்க Accept thirdparty cookies என்ற பாக்ஸில் உள்ள டிக் அடையாளத்தினை எடுத்துவிடவும். இது சில இணைய தளங்களைப் பார்க்கையில் பிரச்னை தரலாம். அந்த வேளையில் மீண்டும் இந்த பாக்ஸில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தி இயக்க வேண்டும்.

  #8

  குக்கீஸ்களை மொத்தமாக நீக்கிவிட்டால், சில இணைய தளங்களைக் காணவும், அவற்றிலிருந்து தகவல்களைப் பெறுவதும் சிரமமாகிவிடும். எனவே, குக்கீஸ்களை மொத்தமாகத் தடை செய்வதனைக் காட்டிலும், பிரவுசரை மூடுகையில் அவற்றை நீக்குமாறு செய்துவிடலாம்.

  பின்னர், தளங்களைப் பார்க்கையில் அவை தரும் குக்கீஸ்களை ஏற்றுக் கொள்ளலாம். இவையும் பிரவுசரை மூடுகையில் நீக்கப்படும். எனவே நமக்கு பிரச்னை ஏற்படாது. ஏனென்றால், இந்த இணைய தளங்கள், உங்கள் கம்ப்யூட்டரில் பதிக்கும் குக்கீஸ் புரோகிராம்களில் இருந்து உங்களைப் பற்றிய முழு விபரங்களை அமைத்துவிடும்.

  இதனைத் தடுக்க, "Clear history when Firefox closes" என்பதனை டிக் செய்து செட்டிங்ஸ் பட்டனை அழுத்தவும். அடுத்து Cookies and any other type of data you want Firefox to automatically delete என்பதனைத் தேர்ந்தெடுத்து அமைக்கவும். பின்னர் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.

  #9

  பயர்பாக்ஸ் பிரவுசரில் கிராஷ் ஏற்படுகையில், அந்த சூழ்நிலை குறித்து அறிக்கை ஒன்று தயார் செய்து, அது மொஸில்லா நிறுவன பயர்பாக்ஸ் சர்வருக்கு அனுப்பப்படும். பிரவுசர் செயல் பாடு குறித்த அறிக்கையும் இதே போல அனுப்பப்படும். மொஸில்லா இந்த அறிக்கைகளைப் பயன்படுத்தி, பிரவுசர் செயல்பாட்டில் ஏற்படும் பிரச்னைகளை சரி செய்கிறது. இதன் மூலம் பயர்பாக்ஸ் செயல்திறனை அதிகரிக்கவும் வழி கிடைக்கிறது.

  ஆனால், இந்த கிராஷ் குறித்த அறிக்கைகளை, பயர்பாக்ஸ் தானாக அனுப்புவதில்லை. நம்மிடம் கேட்டுக் கொண்டு அனுமதி கிடைத்த பின்னரே அனுப்புகிறது. Advanced பிரிவில் உள்ள Submit crash reports என்ற வரியின் முன் உள்ள செக் பாக்ஸில் உள்ள டிக் அடையாளத்தை எடுத்துவிட்டாலும், கிராஷ் ரிப்போர்ட் அனுப்பவா என்ற கட்டம் கிடைக்கும். ஆனால், அதனை அனுப்ப இயலாத வகையில் அது மாற்றப்பட்டிருக்கும்.

  #10

  இதே போல Submit performance data என்ற ஆப்ஷன், பயர்பாக்ஸ் பிரவுசர், தன் செயல்பாடு குறித்த அறிக்கைகளை, நாம் அறியாமலேயே பின்புலத்தில் இருந்து மொஸில்லாவுக்கு அனுப்புகிறது.

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  ஸ்மார்ட் போன் கேலரிக்கு

  இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot

  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more