2018ல் மிகவும் விரும்பப்பட்ட கேமிங் லேப்டாப்கள்.!

  கடந்த காலங்களில் சரியான கேமிங் லேப்டாப்களை வாங்குவது பெரிய பிரச்சனை என்ற நிலை தற்போது உறுதியாக மாறியுள்ளது. தரம் குறைந்த மற்றும் விலைகுறைந்த லேப்டாப் அல்லது தரமான மற்றும் அதிக விலையுள்ள லேப்டாப் என இவையிரண்டில் ஏதேனும் ஒன்றை தேர்வுசெய்த காலம்மாறி, தற்போது சந்தையில் ஏராளமான மிகச்சிறந்த கேமிங் நோட்புக்கள் கிடைக்கின்றன. கணிணிகள் மற்றும் இதர கேமிங் உபகரணங்களுக்கு மாற்றாக ஆற்றல் மற்றும் வடிவமைப்பில் லேப்டாப் உற்பத்தியாளர்கள் மிகப்பெரிய உருவெடுத்துள்ளனர்.

  தற்போது பயனர்கள் கேமிங் லேப்டாப்-ஐ தேர்வு செய்யும் போது சந்திக்கும் மிகப்பெரிய சவால் என்னவெனில், விலை, அளவு அல்லது தரம் எனும் மூன்று அம்சங்களில் ஏதேனும் இரண்டை தேர்வு செய்வதே ஆகும். அதிக திறன்வாய்ந்த லேப்டாப்-ஐ வாங்கும் போது அது உங்கள் பாக்கெட்டில் மிகப்பெரிய துளையிட்டு விடும்.மற்றொருபுறம், திறன்வாய்ந்த விலைகுறைவான லேப்டாப்ஐ வாங்கினால், மிகபெரியதாக எடையுள்ளதாக இருக்கும். அல்லது மெல்லிசான, விலைகுறைவான லேப்டாப்ஐ தேர்வு செய்தால், கிராபிக்ஸ் விசயத்தில் சமசரம் செய்ய வேண்டும். ஆனால் கேம் விளையாட கிராபிக்ஸ் மிகமுக்கியம் என்பதால் இதை ஒப்புக்கொள்ள இயலாது.

  2018ல் மிகவும் விரும்பப்பட்ட கேமிங் லேப்டாப்கள்.!

  அதிர்ஷ்டவசமாக, பயனர்கள் எந்த அம்சத்திற்கு முக்கியத்துவம் தருகிறார்கள் என்பது இல்லாமல் , கேமர்களின் அனைத்து முக்கிய தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் லேப்டாப்களை வடிவமைக்கின்றனர்.மேலும் அதில் உங்கள் வசதிக்கு ஏற்ப கஸ்டமைஸ் செய்ய வாய்ப்புள்ளதால், வாழ்க்கையை மேலும் எளிதாக்குகிறது. 2018ல் வெளியான சிறந்த கேமிங் லேப்டாப்கள் பட்டியல் இதோ...

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  ஏலியன்வேர் 17 ஆர்5

  டெல் நிறுவனத்தின் படைப்பான ஏலியன்வேர் 17 ஆர்5, இந்த ஆண்டின் சிறந்த கேமிங் நோட்புக்காக சக்கைபோடு போட்டது. ரூ1,86,400 என விலை நிர்ணயிக்கப்பட்ட இந்த புதிய ஏலியன்வேர் நட்சத்திர பர்பார்மராக இருக்கிறது. மிக அழகாக செயல்படும் இது, அதிக கிராபிக்ஸ் திறன் தேவைப்படும் கேம்களை கூட எந்தவித இடையூறும் இன்றி விளையாடமுடிகிறது.திறன் வாய்ந்த ஈடிட்டிங்-ஐ கையாளும் இது, எளிதில் அவற்றை வழங்குகிறது.ஆனால் 4.5 கிலோ எடையுள்ளது என்பதல் ,லேப்டாப்பை தங்களுடனேயே எடுத்துச்செல்ல விரும்புபவர்கள் இதை வாங்க தயங்குவர். கேமர்களுக்காக பிரத்யேகமாக அம்சங்களை வழங்கும் இது , வடிவமைப்பு அம்சங்களை வழங்குவதில்லை.

  முக்கிய அம்சங்கள்:

  17.3-இன்ச் எப்.எச்.டி திரை, 8வது தலைமுறை இன்டல்கோர் i7-8750H ப்ராஸ்சஸ்சர், 16GB, 2x8GB, DDR4, 2666MHz ரேம், 512GB PCIe M.2 SSD Class 40 + 1TB 7200RPM HDD சேமிப்புதிறன், 68Wh பேட்டரி, எடை: 4.42 கிலோ

  ஆசுஸ் ராக் ஜிபீரஸ் எம் ஜிஎம்501

  ஆசுஸ் ராக் ஜிபீரஸ் எம் ஜிஎம்501 என்ற மற்றொருமொரு உயர்தர கேமிங் லேப்டாப் இந்ந ஆண்டு வெளியானது. இதன் முன்னோடி லேப்டாப்ன் வெற்றியால், அதனை அடிப்படையாக கொண்டு இந்த லேப்டாப்பின் வெளிப்புற தோற்றம் மற்றும் உயர்தர அம்சங்களில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இவையனைத்தும் சேர்ந்து, நிவிடியா மேக்ஸ் க்யூ ஜிபியூ உதவியுடன், அதிசக்திவாய்ந்த செயல்திறன்மிக்க கிராபிக்ஸை வழங்குகிறது. ரூ2,36,666 என்ற விலையில் கிடைக்கும் இது, சிறப்பான கேமிங் துணையாக இருக்கும் நோட்புக். மெல்லிய வடிவமைப்பை கொண்டிருந்தாலும், ஒப்பில்லா கேமிங் செயல்திறனை வழங்குகிறது. கேமர்களுக்கு கச்சதமாக பொறுந்தும் கீபோர்டு மற்றும் டிராக்பேட், கண்களுக்கு விருந்தளிக்கும் 144Hz G-sync திரையும் இதில் உள்ளன.


  முக்கிய அம்சங்கள்
  3.9-GHz இன்டெல் கோர் i7-8750H சிபியூ, 15.6-இன்ச் திரை, Nvidia GeForce GTX 1070 Max-Q GPU, 16GB ரேம், 256GB NVMe SSD, 1TB secondary SSHD, விண்டோஸ் 10 Pro OS இயங்குதளம்

  ஆசுஸ் ராக் ஸ்ட்ரிக்ஸ் ஸ்கேர் 2

  எப்பிஎஸ் கேம்களுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்ட இந்த ஆசுஸ் ராக் ஸ்ட்ரிக்ஸ் ஸ்கேர் 2 GL504GS ஆனது, 144Hz அதிக ரிப்ரஸ் ரேட் கொண்ட ஐபிஎஸ் வகை திரை மற்றும் NVIDIA GeForce GTX 1060 அம்சங்களை வழங்குகிறது.இதன் முந்தைய வெளியீட்டை போலவே இது இருந்தாலும், வடிவமைப்பில் சில கிறுக்கல்களை செய்யுள்ளது அந்நிறுவனம். குறுகிய பீசல்கள்(Bezels) பிரபலமாகி வந்த நிலையில், அந்த அம்சத்தையும் விரைவாக இணைந்துள்ளது ஆசுஸ். ரூ1,79,990 என்ற விலையில் கிடைக்கும் இந்த சிறப்பான நடுத்தர கேமிங் லேப்டாப், மிகச்சிறந்த கேமிங் அனுபவத்தை தருகிறது.

  முக்கிய அம்சங்கள்

  15.6 இன்ச் ஐபிஎஸ் திரை + 144 HZ GSync, இன்டெல் காஃபி லேக் கோர் i7-8750H ப்ராஸ்சஸ்சர், 32GB DDR4 ரேம், 66 Wh பேட்டரி, RGB backlit கீபோர்டு, 2.42 கிலோ எடை

  ஜிகாபைட் ஏரோ 15

  மிகப்பெரிய, அதிக எடையுள்ள லேப்டாப்களால் மட்டுமே சிறந்த கேமிங் அனுபவத்தை தரமுடியும் என்ற காலம் இருந்தது. ஆனால் தற்போது கச்சிதமான வடிவமைப்பை இந்த லேப்டாப்கள் ,கேமிங் என வரும் போது மிருகத்தனமாக மாறிவிடுகின்றன. 6 கோர் 8வது தலைமுறை இன்டெல் கோர் ஐ7 ப்ராஸ்சஸ்சர் கொண்ட இந்த கருவி GTX 1060 மூலம் சிறப்பான அல்ட்ராபுக்காக செயல்படுகிறது.சிறந்த.கேமிங் அனுபவத்தை மட்டுமே தராமல், நமது பணி சார்ந்த தேவைகளை பூர்த்திசெய்யும் வகையில் செயல்படுவதற்காக 6கோர் சிபியூவிற்கு நன்றி கூறுவேண்டும்.


  முக்கிய அம்சங்கள்

  15.6-இன்ச் எப்எச்டி எல்சிடி திரை, இன்டெல் கோர் i7 8750H சிபியூ, Nvidia GeForce GTX 1060 ஜிபியு, 8GB - 16GB ரேம், 512GB SSD, விண்டோஸ் 10

  ஏசர் பிரிடேடர் ஹீலியோஸ் 300

  நாம் வழங்கும் பணத்திற்கு ஏற்ற சிறப்பான லேப்டாப்பான இது, GTX 1060 6GB கிராப்பிக்ஸ் கார்டு உடன் வருவதால், அதிகபட்ச 60fps திறன் கொண்ட அனைத்து கேம்களையும் விளையாட முடியும். அதிக ரிப்ரஷ் ரேட் அல்லது ஜி-சிங்க் போன்ற அம்சங்கள் இல்லாத சிறப்பான திரை இல்லாதது மற்றும் எச்டிடி அளவை 256ஜிபி எஸ்எஸ்டி ஆக அதிகரிக்க வேண்டிவரும். ஆனால் இச் சிறுசிறு பிரச்சனைகளை இந்த லேப்டாப் வாங்குவதை தடுக்காது. ஒட்டுமொத்தமாக இந்த ஏசர் பிரிடேடர் ஹீலியோஸ் 300 லேப்டாப் சிறந்த பட்ஜெட் கேமிங் லேப்டாப்.


  முக்கிய அம்சங்கள்
  இன்டெல் கோர் i7-7700HQ சிபியு, Nvidia GeForce GTX 1060 6GB ஜிபியு, 16GB DDR4 ரேம், 15.6-இன்ச் எப்எச்டி 60Hz, 256GB M.2 SATA SSD சேமிப்புதிறன், 48 Whr, 2.6 கிலோ எடை

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  English summary
  Most desired gaming laptops launched in 2018 : Read more about this in Tamil GizBot
  X

  இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot

  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more