அதிக GB யுடன் வெளிவந்திருக்கும் மெமரி கார்டு...!

Written By:

இப்போது வடிவமைக்கப்பட்டு சந்தையில் விற்பனைக்கு வரும் ஸ்மார்ட் போன்கள், தங்களின் மெமரியை 128 ஜிபி வரை அதிகப்படுத்தும் திறனையும் வசதியையும் தருகின்றன.

இதற்கேற்ப இயங்கும் மைக்ரோ எஸ்.டி. கார்ட் ஒன்றை சான் டிஸ்க் (SanDisk) நிறுவனம் விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. இதன் விலை ரூ.8,500

அண்மையில் பார்சிலோனா நகரில் நடைபெற்ற உலக மொபைல் கருத்தரங்கில், இந்த மைக்ரோ எஸ்.டி. கார்ட்அறிமுகப்படுத்தப்பட்டது.

அதிக GB யுடன் வெளிவந்திருக்கும் மெமரி கார்டு...!

இதில் 16 மணி நேரம் ஓடக்கூடிய ஹை டெபனிஷன் திரைப்படங்கள், ஏறத்தாழ 7,500 பாடல்கள், 3,200 போட்டோக்கள் மற்றும் 125 சாப்ட்வேர் அப்ளிகேஷன் புரோகிராம்களை ஒரே நேரத்தில் பதிந்து வைத்து இயக்கலாம்.

இது தண்ணீர் மற்றும் சீதோஷ்ண நிலையினால் பாதிப்படையாது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நொடிக்கு 30 எம்.பி. என்ற அளவில் தகவல்களை இதனுடன் பரிமாறிக் கொள்ளலாம்.

இந்தியாவில் இதன் விலை ரூ.8,500 என்பதுதான் பலரை இதனை வாங்கிப் பயன்படுத்த தயங்க வைக்கலாம். இருப்பினும், போகப் போக விலை குறைக்கப்படும் எனப் பலர் எதிர்பார்க்கின்றனர்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot