Just In
- 4 min ago வெளுத்துக்கட்டுது சேல்.. ரூ.21,000 போதும்.. SONY கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 67W சார்ஜிங்.. எந்த மாடல்?
- 2 hrs ago மீண்டும் மீண்டுமா.. 50MP கேமரா.. 100W சார்ஜிங்.. புதிய போனை கொண்டுவரும் OnePlus.. எந்த மாடல்?
- 2 hrs ago டப்பு டப்புனு ஆர்டர்.. ரூ.22,000 பட்ஜெட்ல 12.1 இன்ச் டிஸ்பிளே.. 8 ஸ்பீக்கர்கள்.. 8300mAh பேட்டரி.. எந்த மாடல்?
- 2 hrs ago ஆதார் அலெர்ட்.. மீண்டும் வந்த உத்தரவு.. எதையெல்லாம் இலவசமாக மாற்றலாம்.. இறுதி அறிவிப்பு.. உடனே கவனியுங்க..
Don't Miss
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Movies தக் லைஃப் படத்திலிருந்து துல்கர் வெளியேற அரசியலும் காரணமா?.. வெளியான ஷாக் தகவல்
- News என்ன வேகம்! கிளாம்பாக்கம் தோத்துடும் போலயே.. செங்கல்பட்டில் இவ்வளவு பெரிய பேருந்து நிலையமா?
- Sports SRH vs GT : பல்தான்ஸ்.. நமக்கு இவ்வளவு பெரிய சோதனை வந்தது ஏன்? ஓய்வறையில் ஓபனாக பேசிய ஹர்திக்!
- Finance தங்கம் விலை மீண்டும் உயர்வு.. இனி இதுதான் நிரந்தரமா? சாமானிய மக்களால் தங்கத்தை வாங்கவே முடியாதா..?
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
மைக்ரோசாப்ட் எச்சரிக்கை....!
கடந்த சில வாரங்களாக, வேர்ட் தொகுப்பில் உள்ள குறியீட்டுப்பிழை வழியாக, ஹேக்கர்கள் கம்ப்யூட்டர்களைக் கைப்பற்றும் நிகழ்வுகள் ஏற்பட்டு வருவதாக மைக்ரோசாப்ட் தன் வாடிக்கையாளர்களை எச்சரித்துள்ளது.
மைக்ரோசாப்ட் வழங்கும் அவுட்லுக் 2007, 2010, 2013 தொகுப்புகளின் மாறா நிலை டாகுமெண்ட் வியூவராக, புரோகிராமில் இணைந்ததாக வேர்ட் இயங்குகிறது.
இதில் அமைக்கப்படும் ஆர்.டி.எப். படிவ பைல்களில் உள்ள பிழைக்குறியீடுகளை, ஹேக்கர்கள் பயன்படுத்தி, கம்ப்யூட்டர்களில் உள்ள தகவல்களைத் திருடி வருவதாக, மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட பைல்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், கம்ப்யூட்டரில் நுழையும் ஒருவருக்கு, அதன் அட்மினிஸ்ட்ரேட்டருக்கான உரிமையை வழங்குகின்றன.
இதுவரை, வேர்ட் 2010 தொகுப்பில் மட்டுமே இந்த பிழை இருந்ததை மைக்ரோசாப்ட் உணர்ந்து அதற்கேற்ற நடவடிக்கைகளை எடுத்து வந்தது. தற்போதுதான், இந்த குறியீட்டுப் பிழை வேர்ட் 2003 முதல் வேர்ட் 2013 வரை உள்ளதை மைக்ரோசாப்ட் அறிந்துள்ளது.
மைக்ரோசாப்ட் இதற்கான பாதுகாப்பினை வழங்கும் பேட்ச் பைல் தயாரிக்கும் வரையில், வாடிக்கையாளர்கள் கீழே தரப்பட்டுள்ள நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அவுட்லுக் தொகுப்பில் மெயில்களை, டெக்ஸ்ட்டில் (plain text) பார்மட்டில் மட்டுமே படிக்கும் வகையில் செட் செய்யப்பட வேண்டும்.
கூடுமானவரை RTF பைல்களைத் தவிர்க்கவும். படித்தே ஆக வேண்டும் என்றால், அதனை வைரஸ் சோதனைக்கு உள்ளாக்கி, தெளிவு பெற்ற பின்னரே திறந்து படிக்கவும்.
அட்மினிஸ்ட்ரேட்டர் அக்கவுண்ட்டினைப் பயன்படுத்தாமல், குறைந்த பட்ச பயன்பாட்டினை மேற்கொள்ளும் வகையில், ஒரு யூசர் அக்கவுண்ட்டில், மின் அஞ்சல்களைப் பார்வையிட வேண்டும்.
கம்ப்யூட்டரில் பார்க்கும் வேலைகளையும் இதன் வழியே பார்க்கலாம். இதனால், கம்ப்யூட்டர் இந்த வழியில் பாதிக்கப்பட்டாலும், ஹேக்கர்களுக்கு அட்மினிஸ்ட்ரேட்டிவ் அக்கவுண்ட் வழி கிடைக்காது. குறைந்த பட்ச அனுமதி தரும் யூசர் அக்கவுண்ட் மட்டுமே கிடைக்கும்.
இதற்கான பாதுகாப்பு தொகுப்பினை மைக்ரோசாப்ட் வழங்கும் வரை, Enhanced Mitigation Experience Toolkit (EMET) என்ற தான் தரும் டூலினைப் பயன்படுத்துமாறு மைக்ரோசாப்ட் அறிவுறுத்தியுள்ளது.
கூடுதல் எச்சரிக்கை ஒன்றையும் மைக்ரோசாப்ட் வழங்கியுள்ளது. ஹேக்கர்களின் இந்த முயற்சி, வேர்ட் 2003 தொகுப்பு வழியாகவும் மேற்கொள்ளப்படுகிறது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470