சர்ஃபேஸ் 2 டேப்லெட்டைத் தயாரிக்கும் மைக்ரோசாப்ட்!

கணினித் துறையில் அசைக்க முடியா சக்தியாக இருந்து வரும் மைக்ரோசாப்ட் நிறுவனம் டேப்லெட் துறையிலும் காலடி எடுத்து வைக்க இருக்கிறது. அதாவது வரும் அக்டோபரில் சர்பேஸ் என்ற பெயரில் ஒரு புதிய டேப்லெட்டைக் களமிறக்க இருக்கிறது மைக்ரோசாப்ட். இந்த புதிய டேப்லெட் விண்டோஸ் 8 இயங்கு தளத்தில் இயங்கும்.
அதற்குள் சர்பேஸ் 2 என்று இன்னுமொரு டேப்லெட்டையும் தயாரிக்கும் பணியில் மைக்ரோசாப்ட் இறங்கிவிட்டதாக இணையதளங்களில் ஏறாளமான வதந்திகள் உலா வருகின்றன. இந்த சர்பேஸ் 2 டேப்லெட்டைத் தயாரிக்க அதற்கான புதிய பொறியாளர்களை மைக்ரோசாப்ட் வேலைக்கு சேர்த்துக் கொண்டிருக்கிறது.
இந்த புதிய சர்பேஸ் 2 டேப்லெட்டில் அடுத்த தலைமுறைக்கான புதிய தொழில் நுட்பங்களை மைக்ரோசாப்ட் களமிறக்க இருக்கிறது. அதோடு இந்த புதிய டேப்லெட் மிக உறுதியான உலோகத்தில் தயாரிக்கப்பட இருக்கிறது. மேலும் இந்த டேப்லெட்டில் பிசிக்கல் வேப்பர் டிபொசிசன் கோட்ஸ் உள்ளது. அதனால் இந்த புதிய டேப்லெட் ஈரம் மற்றும் தூசி ஆகியவற்றால் மிக எளிதாக பாதிப்பு அடைவதில்லை.
அதோடு மைக்ரோசாப் நிறுவனம் இந்த டேப்லெட்டில் நீடித்து உழைக்கக் கூடிய எஆர்எம் பேட்டரியை அளித்திருக்கிறது. இந்த பேட்டரி நீடித்த இயங்கு நேரத்தை வழங்கும். அதோடு இந்த புதிய சர்போஸ் 2 டேப்லெட்டின் இயங்கு திறனையும் அபாரமாக இருக்கும் வகையில் மைக்ரோசாப்ட் தயாரித்து வருகிறது.
இந்த டேப்லெட்டைப் பற்றிய புதிய தகவல்களை மைக்ரோசாப்ட் மிக ரகசியமாக வைத்திருக்கிறது. அதோடு இந்த ஆண்டு இறுதியில் இந்த புதிய டேப்லெட் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications