இந்தியா: புதிய சர்ஃபேஸ் ப்ரோ லேப்டாப் அறிமுகம்.!

By Prakash
|

தற்சமயம் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அசத்லான சர்ஃபேஸ் ப்ரோ 2 இன் 1 லேப்டாப் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது, அதன்படி பல்வேறு அதிநவீன தொழில்நுட்ப அமசங்களுடன் இந்த லேப்டாப் மாடல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. புதிய சர்ஃபேஸ் ப்ரோ லேப்டாப் மாடல் பொறுத்தவரை ஆப்பிள் ஐபேட் ப்ரோ மாடல்களை விட 35% கூடுதல் பேட்டரி பேக்கப் வழங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் புதிய சர்ஃபேஸ் ப்ரோ 2 இன் 1 லேப்டாப் மற்றும் டேப்லெட் என இருவித பயன்பாடுகளையும் வழங்குகிறது. இவற்றின் முக்கிய சிறப்பம்சம் என்னவென்றால் சர்ஃபேஸ் ப்ரோ 3 மற்றும் ஐபேட் ப்ரோ மாடல்களை விட முறையே 2.5 மற்றும் 1.7 மடங்கு சிறப்பான கம்ப்யூட்டிங் கொண்டிருக்கும் என அந்நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

 டிஸ்பிளே:

டிஸ்பிளே:

புதிய சர்ஃபேஸ் ப்ரோ லேப்டாப் 12.3-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 2736x1824 பிக்சல் தீர்மானம் மற்றும் 3:2 பிக்சல்சென்ஸ் 10 பாயிண்ட் மல்டி-டச் அம்சம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

இன்டெல் கோர்:

இன்டெல் கோர்:

7வது ஜென் இன்டெல் கோர் எம்3 ஹெச்.டி கிராஃபிக்ஸ் 615 தொழில்நுட்பம் கொண்டு சர்ஃபேஸ் ப்ரோ 2 இன் 1 லேப்டாப் மாடல் வெளிவந்துள்ளது, அதன்பின்பு ஐ5 மற்றும் ஹெச்.டி கிராஃபிக்ஸ் 620 அல்லது ஐ7 மற்றும் ஐரிஸ் பிளஸ் கிராஃபிக்ஸ் 640 மாறுபாடுகளை கொண்டுள்ளது இந்த சாதனம்.

சேமிப்பு:

சேமிப்பு:

புதிய சர்ஃபேஸ் ப்ரோ லேப்டாப் மாடல் 4ஜிபி/ 8 ஜிபி/ 16 ஜிபி ரேம் அமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 128ஜிபி/256ஜிபி/அல்லது 512ஜிபி எஸ்.எஸ்.டி ஹார்டு டிரைவ் சேமிப்பு ஆதரவைக் கொண்டு இந்த லேப்டாப் மாடல் வெளிவரும்.

 கேமரா:

கேமரா:

சர்ஃபேஸ் ப்ரோ 2 இன் 1 லேப்டாப் சாதனத்திக் பின்புறம் 8எம்பி கேமரா இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு இதனுடைய செல்பீ கேமரா 5எம்பி
எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 1.6 வாட் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி ஆடியோ பிரீமியம், ஸ்டீரியோ மைக்ரோபோன்
இவற்றுள் அடக்கம்.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி 3.0, மைக்ரோ எஸ்டி கார்டு ரீடர், மினி டிஸ்பிளே போர்ட், கவர் போர்ட், சர்ஃபேஸ் கணெக்ட் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

Instagram Simple Tips and Tricks (TAMIL)
 விலை:

விலை:

புதிய சர்ஃபேஸ் ப்ரோ லேப்டாப் சாதனத்தின் விலை ரூ.64,999-முதல் தொடங்குகிறது. மேலும் பிளிப்கார்ட், அமேசான் போன்ற வலைதளங்களில் மிக எளிமையாக இந்த சாதனத்தை வாங்க முடியும்.

Best Mobiles in India

English summary
Microsoft Surface Pro launched in India Price specs feature and more; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X