Home
Computer

மைக்ரோசாப்ட் சர்பேஸ் ப்ரோ 8 லேப்டாப் இந்தியாவில் அறிமுகம்.! விலை மற்றும் விவரங்கள்.!

மைக்ரோசாப்ட் நிறுவனம் புதிய மைக்ரோசாப்ட் சர்பேஸ் ப்ரோ 8 லேப்டாப் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. மேலும் மைக்ரோசாப்ட் சர்பேஸ் ப்ரோ 8 லேப்டாப் உடன் சர்பேஸ் ப்ரோ 7 பிளஸ் மாடலையும் விற்பனைக்கு கொண்டுவர உள்ளது இந்நிறுவனம். மேலும் இந்த சாதனங்களின் விலை மற்றும் விவரங்களையும் சற்று விரிவாகப் பார்ப்போம்.

மைக்ரோசாப்ட் சர்பேஸ் ப்ரோ 8 விலை

மைக்ரோசாப்ட் சர்பேஸ் ப்ரோ 8 விலை

  • மைக்ரோசாப்ட் சர்பேஸ் ப்ரோ 8 வைஃபை மாடலின் விலை ரூ.1,04,499-ஆக உள்ளது.
  • மைக்ரோசாப்ட் சர்பேஸ் ப்ரோ 8 வைஃபை + எல்டிஇ மாடலின் விலை ரூ.1,27,599-ஆக உள்ளது.
  •  மைக்ரோசாப்ட் சர்பேஸ் ப்ரோ 7 பிளஸ் விலை

    மைக்ரோசாப்ட் சர்பேஸ் ப்ரோ 7 பிளஸ் விலை

    • மைக்ரோசாப்ட் சர்பேஸ் ப்ரோ 7 பிளஸ் வைஃபை மாடலின் விலை ரூ.83,999-ஆக உள்ளது.
    • மைக்ரோசாப்ட் சர்பேஸ் ப்ரோ 7 பிளஸ் வைஃபை + எல்டிஇ மாடலின் விலை ரூ.1,09,499-ஆக உள்ளது.
    •  மைக்ரோசாப்ட் சர்பேஸ் ப்ரோ 8 அம்சங்கள்

      மைக்ரோசாப்ட் சர்பேஸ் ப்ரோ 8 அம்சங்கள்

      மைக்ரோசாப்ட் சர்பேஸ் ப்ரோ 8 ஆனது 13-இன்ச் PixelSense டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. பின்பு 2880×1920 பிக்சல்தீர்மானம், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த சாதனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.அதேபோல் அடாப்டிவ் கலர் டெக்னாலஜிக்கான ஆதரவைப் பெற்றுள்ளது இந்த லேப்டாப். அதாவது இது சுற்றுப்புற சூழலுக்கு
      ஏற்ப டிஸ்பிளேவில் உள்ள வண்ணங்களை தானாகவே சரிசெய்யும்.

      மைக்ரோசாப்ட்

      மைக்ரோசாப்ட் சர்பேஸ் ப்ரோ 8 மாடலில் 8எம்பி ரியர் கேமரா ஆதரவு உள்ளது. குறிப்பாக இதை கொண்டு 4கே தெளிவுத்திறனில் படம்பிடிக்க முடியும். பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா ஆதரவு கொண்டுள்ளது இந்தஅசத்தலான லேப்டாப்.

      டெல் கோர் பிராசஸர் மூலம் இயக்கப்படுகிறது. அதேபோல் மைக்ரோசாப்ட் சர்பேஸ் ப்ரோ 8 வைஃபை மாடல்

      மைக்ரோசாப்ட் சர்பேஸ் ப்ரோ 8 ஆனது Intel Evo ஆதரவு கொண்ட 11வது தலைமுறை இன்டெல் கோர் பிராசஸர் மூலம்இயக்கப்படுகிறது. அதேபோல் மைக்ரோசாப்ட் சர்பேஸ் ப்ரோ 8 வைஃபை மாடல் ஆனது 32ஜிபி ரேம் மற்றும் 1டிபி ஸ்டோரேஜ் ஆதரவு கொண்டுள்ளது. பின்பு மைக்ரோசாப்ட் சர்பேஸ் ப்ரோ 8 வைஃபை + எல்டிஇ மாடல் ஆனது 17ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

      ர்பேஸ் ப்ரோ 8 சாதனம் புதிய சர்ஃ

      இந்த சர்பேஸ் ப்ரோ 8 சாதனம் புதிய சர்ஃபேஸ் ப்ரோ சிக்னேச்சர் கீபோர்ட் ஆதரவைக் கொண்டுள்ளது. பின்பு சர்ஃபேஸ் ஸ்லிம் பென் 2, வைஃபை 6, புளூடூத் 5.1, Thunderbolt 4 போர்ட்கள் உள்ளிட்ட பல அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய லேப்டாப். அதேபோல்இந்த சாதனத்தை ஒருமுறை சார்ஜ் செய்தால் 16 மணிநேரம் வரை பயன்படுத்த முடியும் என்று கூறப்படுகிறது.

      மைக்ரோசாப்ட் சர்பேஸ் ப்ரோ 7 பிளஸ் அம்சங்கள்

      மைக்ரோசாப்ட் சர்பேஸ் ப்ரோ 7 பிளஸ் அம்சங்கள்

      மைக்ரோசாப்ட் சர்பேஸ் ப்ரோ 7 பிளஸ் சாதனம் ஆனது 12.3-இன்ச் PixelSense டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 2736 x1824 பிக்சல் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது மைக்ரோசாப்ட் சர்பேஸ் ப்ரோ 7 பிளஸ். அதேபோல் இந்த சாதனத்தில் 11வது தலைமுறை இன்டெல் கோர் பிராசஸர் வசதி மற்றும் 1டிபி ஸ்டோரேஜ் ஆதரவு உள்ளது.

      பிப்ரவரி 15-

      குறிப்பாக மைக்ரோசாப்ட் சர்பேஸ் ப்ரோ 7 பிளஸ் சாதனம் ஆனது 5எம்பி செல்பீ கேமரா மற்றும் 8எம்பி ரியர் கேமரா ஆதரவு கொண்டுள்ளது. மேலும் 50.4-வாட் பேட்டரி ஆதரவு கொண்டு வெளிவந்துள்ளது மைக்ரோசாப்ட் சர்பேஸ் ப்ரோ 7 பிளஸ் மாடல். பின்பு டால்பி ஆடியோவுடன் டியூன்
      செய்யப்பட்ட இரட்டை ஸ்பீக்கர்களுடன் இந்த மைக்ரோசாப்ட் சர்பேஸ் ப்ரோ 7 பிளஸ் சாதனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வைஃபை 6,புளூடூத் 5.0, யுஎஸ்பி-சி போர்ட், யுஎஸ்பி-ஏ போர்ட்,3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட இணைப்பு ஆதரவுகளும் இவற்றுள் அடக்கம். குறிப்பாக மைக்ரோசாப்ட் சர்பேஸ் ப்ரோ 8 மற்றும் மைக்ரோசாப்ட் சர்பேஸ் ப்ரோ 7 பிளஸ் சாதனங்கள் வரும் பிப்ரவரி 15-ம் தேதி விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

      அதேபோல் இந்த இரண்டு சாதனங்களும் அதிகளவில் விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பின்பு விரைவில் இந்நிறுவனம் பல புதிய சாதனங்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..

Best Mobiles in India

English summary
Microsoft Surface Pro 8 Launched in India: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X