ஒரு வழியாக இந்தியா வந்து சேர்ந்தது மைக்ரோசாப்ட் சர்ஃபேஸ் ப்ரோ.!!
புது தில்லியில் நடைபெற்ற நிகழ்வில் மை்ரோசாஃப்ட் நிறுவனத்தின் சர்ஃபேஸ் ப்ரோ 4 லாப்டாப் வெளியிடப்பட்டது. இந்தியாவில் இந்த லாப்டாப் விலை ரூ.89,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த கருவியானது அமேசான் இணையதளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட இருக்கின்றது.
இந்த லாப்டாப் கருவியை பயன்படுத்தி பார்க்க விரும்புவோர் நொய்டா, குர்ஜான், தில்லி, பெங்களூரூ மற்றும் மும்பை போன்ற இடங்களில் அமைந்திருக்கும் மைக்ரோசாஃப்ட் ஸ்டோர்களில் வழி செய்யப்பட்டுள்ளது.

டிஸ்ப்ளே
சர்ஃபேஸ் ப்ரோ 4 லாப்டாப் 12.3 இன்ச் திரை மற்றும் பிக்ஸல்சென்ஸ் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது, இதை பாதுகாக்க கார்னிங் கொரில்லா கிளாஸ் 4 வழங்கப்பட்டுள்ளதோடு அதிவேக தொடு திரை வசதியை வழங்க விசேஷமாக ஜி5 சென்சார் வழங்கப்பட்டுள்ளது.

பிராசஸர்
மைக்ரோசாஃப்ட் சர்ஃபேஸ் ப்ரோ 4 லாப்டாப்பில் கோர் ஐ3, 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி எஸ்எஸ்டி கொண்ட மாடல் ரூ.89,990க்கும், கோர் ஐ5 பிராசஸர், 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி எஸ்எஸ்டி மாடல் ரூ.1,20,990க்கும், கோர் ஐ7, 8ஜிபி ரேம், 256ஜிபி எஸ்எஸ்டி மாடல் ரூ.1,44,990க்கும் விற்பனை செய்யப்பட இருக்கின்றது. இவைகளோடு சர்ஃபேஸ் பென் ரூ.5,990க்கும் சர்ஃபேஸ் ப்ரோ 4 டைப் கவர் கீபோர்டு ரூ.12,490க்கும் விற்பனை செய்யப்பட இருக்கின்றது.

மெமரி
மெமரியை பொருத்த வரை மைக்ரோசாஃப்ட் சர்ஃபேஸ் ப்ரோ 3 கருவியில் 128ஜிபி இன்பில்ட் மெமரி வழங்கப்பட்டுள்ளது. இதோடு நான்கு வித மெமரி ஆப்ஷன்களும் வழங்கப்பட்டுள்ளது. அதன் படி 128ஜிபி, 256ஜிபி, 512ஜிபி மற்றும் 1டிபி எஸ்எஸ்டி வழங்கப்பட்டுள்ளது.

கேமரா
கேமராவை பொருத்த வரை 8 எம்பி ப்ரைமரி மற்றும் 5 எம்பி முன்பக்க கேமராவும் வழங்கப்பட்டுள்ளதோடு வை-பை, ப்ளூடூத் 4.0, மற்றும் யுஎஸ்பி 3.0 போர்ட் வழங்கப்பட்டுள்ளது. இதோடு விண்டோஸ் 10 ப்ரோ இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது.

பேட்டரி
மைக்ரோசாஃப்ட் சர்ஃபேஸ் ப்ரோ 4 லாப்டாப் கருவியிலும் முந்தைய மாடலில் வழங்கப்பட்ட அதே பேட்டரி தான் வழங்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரியானது வீடியோ ப்ளேபேக் மற்றும் ப்ரவுசிங் செய்யும் போது 9 மணி நேரம் வரை பேக்கப் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகநூல்
மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.


Click it and Unblock the Notifications