Just In
- 4 hrs ago
நம்பமுடியாத அம்சங்களுடன் மலிவு விலையில் இறங்கிய பிரபல நிறுவனத்தின் ஸ்மார்ட்வாட்ச்.!
- 5 hrs ago
PUBG / BGMI கேமை தோக்கடிக்க போகும் மேட் இன் இந்தியா கேம்.! வேற லெவல் பிளே ஸ்டைல் பாஸ்.!
- 5 hrs ago
சுத்தி சுத்தி அடிக்கும்! 3D சவுண்ட் ஆதரவுடன் மலிவு விலையில் போட் ராக்கர்ஸ் 378!
- 6 hrs ago
யூஸ் பண்றீங்களோ இல்லயோ.. உங்க லேப்டாப்பில் இந்த வெப் ப்ரவுஸர் இருக்கா? அப்போ அலெர்ட் ஆகிக்கோங்க!
Don't Miss
- News
முதல்வர் ஸ்டாலின் மிக நாகரீகமாக நடந்து கொண்டுள்ளார்.. அவரை பாராட்டுகிறேன்.. கே.எஸ்.அழகிரி பேட்டி!
- Sports
6 பந்தால் தோல்வியை தழுவிய இந்தியா.. தனி ஆளாக போராடிய வாசிங்டன் சுந்தர்.. காலை வாரிய டாப் ஆர்டர்
- Finance
கௌதம் அதானி தூக்கத்தைக் கெடுத்த Hindenburg.. இந்த நிறுவனம் யாருடையது தெரியுமா..?
- Movies
பிறந்தநாள் அன்று தற்கொலை செய்துகொண்ட துணிவு பட நடிகர்!
- Lifestyle
உங்களுக்கு நரை முடி மற்றும் வறண்ட முடி இருக்கா? அப்ப இந்த டிப்ஸ்கள ஃபாலோ பண்ணுங்க...!
- Automobiles
முக்கியமான சாலையை கிழித்து கொண்டு சென்ற விசித்திரமான வாகனம்!! பதற்றத்தில் வழிவிட்ட வாகன ஓட்டிகள்...
- Travel
காலம் காலமாக இஸ்லாமியர்கள் வழிபடும் சிவன் கோவில் – மனமுருகி வேண்டினால் கேட்டது கிடைக்குமாம்!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
Microsoft இந்தியாவில் அறிமுகம் செய்த புதிய லேப்டாப்: அடேங்கப்பா என சொல்ல வைக்கும் விலை.!
மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்தியாவில் சர்பேஸ் லேப்டாப் கோ 2 மாடலை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இந்த புதிய லேப்டாப் அடேங்கப்பா என சொல்லவைக்கும் உயர்வான விலையில் வெளிவந்துள்ளது.

மேலும் அமேசான் மற்றும் ரிலையன்ஸ் டிஜிட்டல் போன்ற ஆன்லைன் தளங்களில் விற்பனைக்கு வருகிறது சர்பேஸ் லேப்டாப் கோ 2. இப்போது இந்தபுதிய லேப்டாப் மாடலின் விலை மற்றும் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

என்ன விலை?
8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவு கொண்ட மைக்ரோசாப்ட் சர்பேஸ் லேப்டாப் கோ 2 மாடலின் விலை 73,999-ஆக உள்ளது.பின்பு இதன் 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவு கொண்ட வேரியண்டின் விலை ரூ.80,999-ஆக உள்ளது.

அட்டகாசமான டிஸ்பிளே
மைக்ரோசாப்ட் சர்பேஸ் லேப்டாப் கோ 2 ஆனது 12.4-இன்ச் பிக்சல்சென்ஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. மேலும் 1536×1024 பிக்சல்ஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த மைக்ரோசாப்ட் லேப்டாப்.

சிறந்த மென்பொருள் வசதி
புதிய மைக்ரோசாப்ட் சர்பேஸ் லேப்டாப் கோ 2 மாடல் ஆனது சிறந்த மென்பொருள் வசதியுடன் வெளிவந்துள்ளது என்றுதான் கூறவேண்டும். அதாவது 11வது ஜென் இன்டெல் கோர் ஐ5-1135ஜி7 சிபுயு உடன் இன்டெல் ஐரிஸ் Xe GPU ஆதரவைக் கொண்டுள்ளது இந்த லேப்டாப். குறிப்பாக இதன் செயல்திறன் அருமையாக இருக்கும்.
கல்வி, தினசரி வேலை போன்றபயன்களுக்கு லேப்டாப் தேடும் பயனர்களுக்கு இது சிறந்த தேர்வாகும். அதேபோல் 8ஜிபி LPDDR4xரேம் மற்றும் 256ஜிபி வரை இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புத்தம் புதிய மைக்ரோசாப்ட் சர்பேஸ் லேப்டாப் கோ 2 மாடல்.

அருமையான கேமரா
இந்த மைக்ரோசாப்ட் சர்பேஸ் லேப்டாப் கோ 2 மாடலில் எச்டி கேமரா, டூயல் ஃபார்-ஃபீல்ட் ஸ்டுடியோ மைக்ஸ், டால்பி ஆடியோ பிரீமியம் ஆதரவு கொண்ட Omnisonic ஸ்பீக்கர்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது
மைக்ரோசாப்ட் நிறுவனம்.

தரமான பேட்டரி
கேமிங் பயனர்களுக்கு தகுந்தபடி இதில் பேட்டரி வசதி உள்ளது. அதாவது மைக்ரோசாப்ட் சர்பேஸ் லேப்டாப் கோ 2 ஆனது 41Wh பேட்டரி ஆதரவைக் கொண்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. சுமார் 13.5 மணிநேர பேட்டரி பேக்கப் கிடைக்கும் என்று அந்நிறுவனம்சார்பில் கூறப்பட்டுள்ளது.
ஹெட்போன் ஜாக், யுஎஸ்பி டைப் சி போர்ட், யுஎஸ்பி டைப்-ஏ போர்ட், புளூடூத் 5.1, வைஃபை 6 போன்ற கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது புதிய மைக்ரோசாப்ட் சர்பேஸ் லேப்டாப் கோ 2 மாடல். குறிப்பாக இந்த புதிய லேப்டாப் மாடல் விண்டோஸ் 11 இயங்குதளத்தை கொண்டுள்ளது.

நம்பி வாங்கலாம்
மேலும் இந்த புதிய லேப்டாப்பில் பவர் பட்டனில் கைரேகை ரீடர் ஆதரவும் உள்ளது. எனவே சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொடுக்கிறது இந்த லேப்டாப். குறிப்பாக மேக்புக் ஏர் லேப்டாப் விட தரமான கீபோர்ட் ஆதரவைக் கொண்டுள்ளது மைக்ரோசாப்ட் சர்பேஸ் லேப்டாப் கோ 2 மாடல்.
அதேபோல் மைக்ரோசாப்ட் சர்பேஸ் லேப்டாப் கோ 2 மாடலின் எடை 1.12 கிலோ மட்டுமே. சுருக்கமாக கூறவேண்டும் என்றால் விலைக்கு தகுந்த அம்சங்களுடன் வெளிவந்துள்ளது புதிய மைக்ரோசாப்ட் லேப்டாப்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470