அட்டகாசமான மைக்ரோசாப்ட் சர்பேஸ் புக் 2 அறிமுகம்.!

இந்த மைக்ரோசாப்ட் சர்பேஸ் புக் 2 பொறுத்தவரை பேக்-லைட் விசைப்பலகை இடம்பெற்றுள்ளது, அதன்பின் இயக்குவதற்க்கு மிக அருமையாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

By Prakash
|

மைக்ரோசாப்ட் நிறுவனம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மைக்ரோசாப்ட் சர்பேஸ் புக் 2 என்ற மாடல்களை அறிமுகம் செய்துள்ளது, மேலும் சிறந்த கிராபிக்ஸ் அம்சங்கள் மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகளுடன் வெளிவந்துள்ளது இந்த மைக்ரோசாப்ட் சர்பேஸ் புக் 2 மாடல்கள்.

அட்டகாசமான மைக்ரோசாப்ட் சர்பேஸ் புக் 2 அறிமுகம்.!

இந்த மைக்ரோசாப்ட் சர்பேஸ் புக் 2 பொறுத்தவரை பேக்-லைட் விசைப்பலகை இடம்பெற்றுள்ளது, அதன்பின் இயக்குவதற்க்கு மிக அருமையாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, பல மென்பொருள் தொழில்நுட்ப அம்சத்துடன் வெளிவந்துள்ளது இந்த சாதனங்கள்.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

மைக்ரோசாப்ட் சர்பேஸ் புக் 2 பொறுத்தவரை இரண்டு வகைகளில் வெளிவந்துள்ளது, அதன்படி 13.5-இன்ச் டிஸ்பிளே மற்றும் (3,000-2,000)பிக்சல்
தீர்மானம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது, அடுத்து 15-இன்ச் டிஸ்பிளே மற்றும்(3,240-2,160)பிக்சல் தீர்மானம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்பேஸ் பென்:

சர்பேஸ் பென்:

மைக்ரோசாப்ட் சர்பேஸ் புக் 2 மாடல்களில் சர்பேஸ் பென் மற்றும் சர்பேஸ் டயல் வசதி போன்றவை இடம்பெற்றுள்ளது, மேலும் பல்வேறு
தொழில்நுட்பவசதிகள் கொண்டுள்ளது இந்த 15-இன்ச் மற்றும் 13.5-இன்ச் சாதனங்கள்.

இன்டெல்:

இன்டெல்:

இந்த மைக்ரோசாப்ட் சர்பேஸ் புக் 2 சாதனங்கள் பொதுவாக 7வது தலைமுறை இன்டெல் 'கேபி லேக்' செயலிகள் அத்துடன் புதிய 8 வது தலைமுறை இன்டெல் 'கேபி லேக்;" செயலிகள் கொண்டு இயக்கப்படுகிறது.

கிராஃபிக்ஸ்:

கிராஃபிக்ஸ்:

13.5-அங்குல மாறுபாடு பொதுவாக இன்டெல் எச்டி கிராஃபிக்ஸ் 620(கேபி லேக்) இன்டெல் யுஎச்டி கிராஃபிக்ஸ் 620(கேபி லேக்) மற்றும் என்விடியா ஜியிபோர்ஸ் ஜி.டி.எக்ஸ் 1050 (2 ஜிபி) செயலியைக் கொண்டுள்ளது, அதன்பின் 15-அங்குல மாறுபாடு பொறுத்தவரை இன்டெல் யுஎச்டி கிராஃபிக்ஸ்
620 மற்றும் ஜியிபோர்ஸ் ஜி.டி.எக்ஸ் 1060 (6ஜிபி) செயலி இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

வைபை, யுஎஸ்பி-ஏ 3.0 போர்ட், யுஎஸ்பி டைப்-சி போர்ட், எச்டிஎம்ஐ போர்ட் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்
எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விலை:

விலை:

13.5-அங்குல மாறுபாடு கொண்ட சர்பேஸ் லேப்டாப் விலை ரூ.97,500-ஆக உள்ளது, அதன்பின் 15-அங்குல மாறுபாடு கொண்ட சர்பேஸ் லேப்டாப் விலை ரூ.1,62,500-எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Microsoft Surface Book 2 launched with updated design and features; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X