Home
Computer

ஐபேடைவிட குறைந்த விலையில் வரும் மைக்ரோசாப்ட் வைபை சர்பேஸ் டேப்லெட்

By Karthikeyan
ஐபேடைவிட குறைந்த விலையில் வரும் மைக்ரோசாப்ட் வைபை சர்பேஸ் டேப்லெட்

மைக்ரோசாப்ட் நிறுவனம் வரும் அக்டோபர் 26 அன்று தனது புதிய வைபை சர்பேஸ் டேப்லெட்டைக் களமிறக்க இருக்கிறது. அதே நாளில் தான் விண்டோஸ் 8 இயங்கு தளத்தையும் மைக்ரோசாப்ட் களமிறக்குகிறது.

இந்த நிலையில் தனது புதிய வைபை சர்பேஸ் டேப்லெட்டை ஆப்பிளின் புதிய ஐபேடின் விலைக்கும் குறைவாக விற்க இருக்கிறது. அதாவது 32ஜிபி வைபை சர்பேஸ் டேப்லெட்டை 499 அமெரிக்க டாலர்களுக்கு விற்க இருக்கிறது. ஆனால் ஆப்பிளின் புதிய ஐபேட் 599 அமெரிக்க டாலர்களுக்கு விற்கப்பட இருக்கிறது.

மேலும் உருவத்திலும் ஐபேடைவிட வைபை சர்பேஸ் டேப்லெட் சற்று பெரிதாகவும் இருக்கிறது. இந்த சர்பேஸ் டேப்லெட் விண்டோஸ் 8 இயங்கு தளத்தில் வருகிறது. மேலும் இந்த விலைக் குறைப்பு சில நாள்களுக்கு மட்டுமே வழங்கப்படுவதாக மைக்ரோசாப்ட் தெரிவித்திருக்கிறது. இந்த டேப்லெட்டை குறைந்த விலையில் வாங்க மைக்ரோசாப்டின் அதிகார்ப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

ஆப்பிளின் ஐபேடுக்கு சர்பேஸ் டேப்லெட் கடும் போட்டியாக இருக்கும் என்று மைக்ரோசாப்ட் நம்புகிறது. மேலும் இந்த டேப்லெட்டில் ஆபிஸ் வேர்ட், பவர் பாயின்ட், எக்சல், எக்ஸ்பாக்ஸ் விளையாட்டுகள், வீடியோ மற்றும் இசை அப்ளிகேசன்கள் உள்ளன.

மேலும் இந்த டேப்லெட் 2 கேமராக்கள், யுஎஸ்பி மற்றும் வைபை வசதியுடன் வருகிறது. 32ஜிபி டேப்லெட்டை அதன் டச் கவர் மற்றும் கீபோர்டுடன் 599 அமெரிக்க டாலர்களுக்கும், 64ஜிபி டேப்லெட்டை கருப்பு டச் கவருடன் 699 அமெரிக்க டாலர்களுக்கும் மைக்ரோசாப்ட் விற்பனை செய்ய இருக்கிறது.

இந்த புதிய மைக்ரோசாப்ட் சர்பேஸ் டேப்லெட் கண்டிப்பாக டேப்லெட் சந்தையில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தும் என்று நம்பலாம்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X