குறைந்த விலையில் லேப்டாப் அறிமுகம் செய்ய மைக்ரோசாப்ட் நிறுவனம் திட்டம்.!
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அனைத்து தயாரிப்புகளுக்கும் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது என்று தான் கூறவேண்டும். இந்நிலையில் மைக்ரோசாப்ட் குறைந்த விலையில் லேப்டாப் மாடலை உருவாக்கி வருகிறது எனத் தகவல் வெளிவந்துள்ளது. எனவே இந்த சாதனம் குறைந்த விலையில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் இந்த புதிய மைக்ரோசாப்ட் லேப்டாப் மாடலின் சில அம்சங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளது. அதன்படி புதியமைக்ரோசாபட் லேப்டாப் மாடல் ஆனது 11.6-இன்ச் டிஸ்பிளே வசதியுடன் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.பின்பு 1366x768 பிக்சல் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த லேப்டாப் மாடல் வெளிவரும் என்று தகவல்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் லேப்டாப் மாடலில் இன்டெல் செலரான் என்4120 பிராசஸர் வசதி உள்ளது. எனவே இயக்கத்திற்கு மிக அருமையாக இருக்கும் என்றுதான் கூறவேண்டும். மேலும் 8ஜிபி ரேம் ஆதரவுடன் வெளிவரும் இந்த அட்டகாசமான மைக்ரோசாப்ட் லேப்டாப் மாடல்.

இந்த புதிய லேப்டாப் மாடலில் யு.எஸ்.பி. ஏ போர்ட், ஒரு யு.எஸ்.பி. சி போர்ட், ஹெட்போன் ஜாக், பேரெல் ரக ஏ.சி. போர்ட் போன்றவை இடம்பெற்றுள்ளதாக தெரிகிறது. மேலும் பல்வேறு இணைப்பு ஆதரவுகளுடன் இந்த புதிய லேப்டாப் மாடல் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் இந்த புதிய லேப்டாப் டென்ஜின் எனும் குறியீட்டு பெயரில் உருவாகி வருகிறது. குறிப்பாக மாணவர்களுக்கு பயன்படும் வகையில் இந்த லேப்டாப் இருக்கும் என மைக்ரோசாப்ட் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த மாதம் சர்பேஸ் டுயோ 2 மடிக்கக்கூடிய
சாதனத்தை அறிமுகம் செய்தது மைக்ரோசாப்ட் நிறுவனம். இந்த சர்பேஸ் டுயோ 2 சாதனத்தின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

சர்பேஸ் டுயோ 2 சாதனத்தில் 5.8-இன்ச் பிக்சல் சென்ஸ் பியூஷன் டிஸ்ப்ளே வசதியைக் கொண்டுள்ளது. அதேபோல் இந்த சாதனம் திறந்த நிலையில் 8.3-இன்ச் பிக்சல் சென்ச் டிஸ்பிளே வசதி, 90 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட் வசதியைக் கொண்டுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் இந்த சாதனத்தில் மைக்ரோசாப்ட் 365 மற்றும் மைக்ரோசாப்ட் டீம்ஸ் சேவைகளுக்கான வசதிவழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக 800 நிட்ஸ் ப்ரைட்னஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு வசதி, ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர் வசதியுடன் அட்ரினோ 660 ஜிபியு ஆதரவு, 8ஜிபி ரேம் உள்ளிட்ட பல அம்சங்களை கொண்டுள்ளது இந்த சர்பேஸ் டுயோ 2 மாடல்.

சர்பேஸ் டுயோ 2 பின்புறம் 12எம்பி பிரைமரி கேமரா +16எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 12எம்பி டெலிபோட்டோ கேமரா என மொத்தம் மூன்று கேமராக்கள் உள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 12எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த மைக்ரோசாப்ட் சர்பேஸ் டுயோ 2 மாடல். அதேபோல் 4449 எம்ஏஎச் பேட்டரி, 23 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி, 5ஜி எஸ்.ஏ./என்.எஸ்.ஏ, 4ஜி எல்.டி.இ, வைபை, ப்ளூடூத் 5 போன்ற பல ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அசத்தலான சாதனம்.


Click it and Unblock the Notifications