விண்டோஸ் 7 கம்ப்யூட்டர்களுக்கு டச் மவுஸ்: மைக்ரோசாப்ட் அறிமுகம்

கம்ப்யூட்டர் திரையில் தெரியும் அப்ளிகேஷன்களை தேர்வு செய்வதற்கு சாதாரண மவுசுகளில் பட்டன்களை கிளிக் செய்கிறோம்.
ஆனால், புதிய மவுசில் கிளிக் என்ற பேச்சுக்கே இடமில்லை. மவுசின் மீது விரல்களை நகர்த்தி (லேப்டாப் டச்பேட் போன்று) திரையில் தெரியும் அப்ளிகேஷன்களை தேர்வு செய்யலாம்.
இந்த மவுசில் பட்டன்களுக்கு வேலை இல்லை. முழுக்க முழுக்க தொடு உணர்வு சென்சார் மூலம் இயங்குகிறது.
சாதாரண மவுசுகளை விட இந்த டச் மவுஸ் மூலம் கம்ப்யூட்டரில் பணிகளை சுலபமாகவும், வேகமாகவும் முடிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிளிக், பிளிக், ஸ்க்ரோல், பான், டில்ட் மற்றும் ஸ்வைப் உள்ளிட்ட அப்ளிகேஷன்களை வெகு எளிதாக இதில் செய்யலாம் என்று மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது.
விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்ட கம்ப்யூட்டர்களில் மட்டும் இந்த மவுசை பயன்படுத்த முடியும்.
கண்ணாடிக்கு மேல் வைத்தால் மட்டும் இந்த மவுஸ் வேலை செய்யாது. ஆனால், அனைத்து விதமான இடங்களிலும் இதை பயன்படுத்தலாம்.
புளூட்ராக் என்ற அதிநவீன தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இந்த மவுஸ் வேலை செய்கிறது.
இந்திய மார்க்கெட்டிற்கு இதுபோன்ற மவுஸ் புதியது என்று கூறும் மைக்ரோசாப்ட் ரூ.3,999 விலையில் இந்த மவுசை அறிமுகம் செய்துள்ளது.


Click it and Unblock the Notifications