Home
Computer

பட்ஜெட் விலையில் சர்ஃபேஸ் புக், சர்ஃபேஸ் லேப்டாப் அறிமுகம்.!

சர்ஃபேஸ் புக் 2 சாதனத்தில் 8எம்பி ரியர் கேமரா மற்றும் 5எம்பி செல்பீ கேமரா இடம்பெற்றுள்ளது, மேலும் இந்த சாதனத்தின் முன்புறம் டால்பி ஆடியோ ஸ்பீக்கர்கள் வழங்கப்பட்டுள்ளது.

By Prakash

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தற்சமயம் பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்திவருகிறது, அதன்படி கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட சர்ஃபேஸ் புக்,சர்ஃபேஸ் லேப்டாப் போன்ற சாதனங்களை தற்சமயம் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளது. மேலும் பல்வேறு அதிநவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் இந்த லேப்டாப் மாடல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிட்த்தக்கது.

சர்ஃபேஸ் புக் 2 பொதுவாக லேப்டாப் மோட், டேப்லெட் மோட், ஸ்டூடியோ மோட் மற்றும் வியூ மோட் என நான்கு விதங்களில் பயன்படுத்த முடியும்.மேலும் பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த சாதனம். மேலும் டால்பி ஆடியோ ஸ்பீக்கர்கள் இவற்றுள் இடமபெற்றுள்ளது.

பட்ஜெட் விலை:

பட்ஜெட் விலை:

கடந்த ஆண்டு அக்டோபரில் வெளிவந்த சர்ஃபேஸ் புக் 2 விலைப் பொறுத்தவரை 1499 டாலர்கள் என விலை நிர்ணயம் செய்யப்பட்ட நிலையில், இப்போது புதிய மாடலின் விலைப் பொறுத்தவரை 1199 டாலர்கள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல்
கடந்த ஆண்டு மே மாதம் வெளிவந்த மைக்ரோசாஃப்ட் சர்ஃபேஸ் லேப்டாப் 999 டாலர்களுக்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்சமயம் 799 டாலர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

சர்ஃபேஸ் புக் 2:

சர்ஃபேஸ் புக் 2:

சர்ஃபேஸ் புக் 2 பொதுவாக 13.5-இன்ச் டிஸ்பிளே மற்றும் 3000x2000 பிக்சல் தீர்மானம், அதன்பின்பு 15-இன்ச் மாடலில் 3240x2160 பிக்சல் தீர்மானம் கொண்டுள்ளது. மேலும் யு.எஸ்.பி. 3.1 ஜென் 1 போர்ட், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5 எம்எம் ஆடியோஜாக், 2 சர்ஃபேஸ் கனெக்ட் போர்ட் மற்றும் எஸ்.டி. கார்டு ரென்டர் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

இன்டெல் கோர்:

இன்டெல் கோர்:

சர்ஃபேஸ் புக் 2 பொறுத்தவரை இன்டெல் கோர் ஐ5 பிராசஸர், 8 ஜிபி ரேம், இன்டெல் கிராஃபிக்ஸ் 620 உள்ளிட்ட அம்சங்களை கொண்டுள்ளது,
அதன்பின்பு சர்ஃபேஸ் புக் 2 சாதனம் இந்த ஆண்டு இந்திய சந்தைக்கு வெளிவரும் எனத் தகவல்கள் தெரிவிக்கப்பட்பட்டுள்ளது.

கேமரா:

கேமரா:

சர்ஃபேஸ் புக் 2 சாதனத்தில் 8எம்பி ரியர் கேமரா மற்றும் 5எம்பி செல்பீ கேமரா இடம்பெற்றுள்ளது, மேலும் இந்த சாதனத்தின் முன்புறம்
டால்பி ஆடியோ ஸ்பீக்கர்கள் வழங்கப்பட்டுள்ளது.

 சர்ஃபேஸ் லேப்டாப்:

சர்ஃபேஸ் லேப்டாப்:

சர்ஃபேஸ் லேப்டாப் மாடல் பொறுத்தவரை இயக்கத்திற்கு மிக அருமையாக இருக்கும், அதன்படி இவற்றுள் எம்3 பிராசஸர், இன்டெல் ஹெச்டி கிராஃபிக்ஸ் 615 போன்ற பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

4 ஜிபி ரேம்:

4 ஜிபி ரேம்:

4 ஜிபி ரேம், 128 ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவைக் கொண்டுள்ளது இந்த சர்ஃபேஸ் லேப்டாப், மேலும் இவற்றில் சிறந்த தொழில்நுட்பம்
கொண்ட மென்பொருள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Microsoft introduces cheaper variants of Surface Laptop and Surface Book 2 ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X