மைக்கிரோசாப்ட் சிஈஓ செய்த தவறுகள்!!!

|

உலகின் முன்னனி நிறுவனங்களில் ஓன்றாக மைக்கிரோசாப்ட் விளங்கி வருகிறது. இப்பொழுது மைக்கிரோசாப்டின் சிஈஓவாக இருப்பவர் ஸ்டீவ் பால்மர் என்பது நமக்கு தெரிந்ததே. இவர் அடுத்த சில மாதங்களுக்குள் தான் ஓய்வு பெற போவதாக அறிவித்துள்ளார்.

இவரின் இந்த அறிவிப்புக்கு பின்னர் மைக்கிரோசாப்டின் அடுத்த சிஈஓ யார் என்ற கேள்வி டெக்னாலஜி உலகில் பரவ தொடங்கியுள்ளது. தொழில்நுட்ப உலகில் உள்ள வல்லுநர்கள் பல பெயர்களை இதற்க்கு பரிந்துரை செய்கின்றனர். ஸ்டீவ் பால்மரின் ஓய்வுக்கு பின்னர் இந்த கேள்விக்கான விடை கிடைக்கும்.

ஸ்டீவ் பால்மர் சிஈஓவாக இருந்த தனது பதவி காலத்தில் மைக்கிரோசாப்ட் நிறுவனத்தின் நலனுக்காக பல நல்ல விஷியங்களை செய்துள்ளார். நிறுவனத்தின் லாபங்களை அதிகரித்துள்ளார். அதே சமயம் அவர் தனது பதவி காலத்தில் நிறைய தவறுகளையும் செய்துள்ளார் அதை பற்றி கீழே உள்ள சிலைட்சோவில் பார்ப்போம்.

ஆன்டிராய்ட்

ஆன்டிராய்ட்

ஸ்மார்ட்போன் மார்கெட்டில் உள்ள 80% ஸ்மார்ட்போன்களில் ஆன்டிராய்ட் ஆதிக்கம் செலுத்த பால்மர் விட்டுவிட்டார்.

யாஹூ

யாஹூ

யாஹூ நிறுவனத்தை வாங்க முயற்ச்சி செய்து அதை வாங்காமல் தவறவிட்டார் ஸ்டீவ் பால்மர்.

மைக்கிரோசாப்ட்

மைக்கிரோசாப்ட்

மைக்கிரோசாப்ட் நிறுவனம், ஆப்பிளின் ஐபேட் வெளிவராததுக்கு முன்பு ஒரு புதுமையான டேப்லெட்டை தயாரிக்கும் முயற்ச்சியில் இருந்தது ஆனால் ஸ்டீவ் பால்மர் அதை நிறத்திவிட்டார்.

ஆப்பிள்

ஆப்பிள்

ஆப்பிள் ஐபோன் மற்றும் ஐபாட்கள் பற்றி கிண்டலடித்து வந்தார் பால்மர். அந்த சாதனங்கள் வெற்றி பெறாது என்றும் கூறினார். ஆனால் அந்த சாதனங்கள் மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றன.

வின்டோஸ் விஸ்டா

வின்டோஸ் விஸ்டா

இவர் அதிகம் எதிர்பார்த்து வெளியிட்ட வின்டோஸ் விஸ்டா வெற்றி அடையவில்லை.

ஸூன்

ஸூன்

ஆப்பிள் ஐபாட் வெற்றிக்கு பின்னர் மைக்கிரோசாப்ட் நிறுவனம் ஸூன் எனும் சாதனத்தை உருவாக்கி வெளியிட்டது அது வெற்றி பெறவில்லை.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X