விண்டோஸ் 8 தான் பெஸ்ட்....!

By Keerthi
|

இன்றைக்கு நாம் பயன்படுத்தும் கம்பியூட்டர்களில் மைக்ரோசாப்ட் இதுவரை வழங்கியுள்ள விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில், விஸ்டா அளவிற்கு வாடிக்கையாளர்களின் வெறுப்பைப் பெற வில்லை என்றாலும், விண்டோஸ் 8 அதிக ஆதரவினைப் பெறவில்லை என்பதுவும் உண்மையே.

ஆனால், வேறு பல விஷயங்களில் விண்டோஸ் 8, மற்ற முந்தைய சிஸ்டங்கள் அனைத்தையும் விஞ்சி இயங்குகிறது. இயங்குவதற்கு வேகமாகத் தயாராகும் தன்மை, க்ளவ்ட் கம்ப்யூட்டிங் வழியாக ஒன் ட்ரைவ் இணைந்த செயல்பாடு, அதன் அப்ளிகேஷன் ஸ்டோரில் வேகமாக அதிகரித்து வரும் புரோகிராம்களின் எண்ணிக்கை ஆகியன இன்று பலரின் பாராட்டுதல்களைப் பெற்று வருகிறது.

இருப்பினும், ஒரு அம்சத்தில் மற்ற முந்தைய விண்டோஸ் பதிப்புகளைக் காட்டிலும் மிகச் சிறப்பாக விண்டோஸ் 8 வடிவமைக்கப்பட்டுள்ளது. அது சிஸ்டம் இயக்கத்திற்கான பாதுகாப்பு வளையங்களை அமைப்பதுதான். விண்டோஸ் இயக்க முறைமையைப் பொறுத்தவரை, அதில் எப்போதும் ஏதாவது குறியீட்டு பிழை கண்டறியப்பட்டுக் கொண்டே இருக்கப்படும்.

அதற்கான தீர்வு தரும் பைல்கள் வழங்குவதை மைக்ரோசாப்ட் தொடர் பணியாகவே செயல்படுத்தி வருகிறது. விண்டோஸ் 8 மிக அதிகமான பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டு இந்த பயத்தினை வாடிக்கையாளர்களிடமிருந்து நீக்கியுள்ளது. அவற்றை இங்கு காணலாம்.
பாதுகாப்பினைப் பொறுத்தவரை, இந்த சிஸ்டம் தான், மிக அதிக கூடுதல் பாதுகாப்பு கவசங்களோடு இயங்குகிறது.

#1

#1

பெர்சனல் கம்ப்யூட்டர் தயாரிப்பாளர்கள் அமைப்பு இணைந்து Secure Boot என்ற ஒரு வரையறையை வகுத்துள்ளது. இதனைக் கொண்டுள்ள ஓர் ஆப்பரேட்டிங் சிஸ்டம், வழக்கமான BIOS அமைப்பு இல்லாமல், கம்ப்யூட்டரிலேயே அமைக்கப்பட்ட UEFI firmware சிஸ்டத்தை இயக்கும்.

#2

#2

இதில் இந்த அமைப்பு சான்றளிக்கப்பட்ட பாதுகாப்பு கொண்ட ஆப்பரேட்டிங் சிஸ்டம் மட்டுமே இயங்கும். இதனால், பயாஸ் அமைப்பில் அமர்ந்து கொண்டு இயங்கிய ரூட் கிட் போன்ற கொடிய வைரஸ்கள் இயங்குவது தொடக்கத்திலேயே தடுக்கப்படுகிறது.

#3

#3

இது முதலில் சொல்லப்பட்ட Secure Boot பெர்சனல் கம்ப்யூட்டர் தயாரிப்பாளர்கள் அமைப்பு வழிமுறையின் ஓர் அங்கமே. இது முதலில் இயங்கி தன் சோதனையை மேற்கொள்ளும்.

#4

#4

கம்ப்யூட்டர் சிஸ்டம் இயங்கத் தொடங்கும்போது, விண்டோஸ் சிஸ்டத்துடன் இணைந்து தரப்படாமல், இயங்கத் தொடங்கும் அப்ளிகேஷன்களை இது சோதனை செய்திடும்.

சோதனையின் முடிவில், இயங்கப் போகும் விண்டோஸ் இயக்கத்தில் இல்லாத மற்ற அப்ளிகேஷன்கள் எப்படிப்பட்டவை என சிஸ்டம் கெர்னலுக்குத் தெரிவிக்கும்.

#5

#5

அவற்றை 'good', 'bad', 'bad but boot critical' மற்றும் 'unknown' என வகைப்படுத்திக் குறிப்பிட்டு அறிவிக்கும். 'bad' என அறியப்பட்டவை அல்லாத மற்ற ட்ரைவர்கள் மட்டுமே கெர்னல் சிஸ்டத்தில் ஏற்றும்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X