டேப்லட் சந்தையில் கால் பதிக்கும் மைக்ரோசாஃப்டு!

இதை தொடர்ந்து நேற்று சர்ஃபேஸ் என்ற பெயரில் புதிய டேப்லட்டினை அறிமுகம் செய்துள்ளது மைக்ரோசாஃப்டு நிறுவனம். இதில் 2 விதமான வெர்ஷன்களை அறிமுகம் செய்துள்ளது மைக்ரோடாஃப்டு. விண்டோஸ் ஆர்டி மற்றும் விண்டோஸ்-8 ப்ரோ என்ற 2 வெர்ஷன்களை அறிமுகம் செய்கிறது மைக்ரோசாஃப்டு நிறுவனம்.
இதில் விண்டோஸ் ஆர்டி வெர்ஷன் வெளியிடப்படும். ஆனால் விண்டோஸ்-8 ப்ரோ வெர்ஷன் 3 மாதத்திற்கு பிறகு தான் வெளியாகும் என்றும் தகவல்கள் கூறுகின்றன.
விண்டோஸ் ஆர்டி மாடல் 676 கிராம் எடையை கொண்ட டேப்லட். இதில் 10.6 இஞ்ச் திரை வசதியினை இந்த டேப்லட் வழங்கும். இதன் மூலம் தகவல்களை துல்லியமாக பார்க்கலாம். இதில் 32 ஜிபி மற்றும் 64 ஜிபி மெமரி வசதியினையும் பெறலாம்.
இந்த டேப்லட்டின் வீடியோவினையும் இங்கே பார்க்கலாம்.
இதே விண்டோஸ் ப்ரோ மாடல் 903 கிராம் எடை கொண்டதாக இருக்கும். இந்த மாடலும் 10.6 இஞ்ச் திரை வசதியினையே வழங்கும். இதனால் இந்த 2 டேப்லட் மாடல்களும் ஒரே அளவு திரை வசதியினை கொண்டதாக இருக்கும் என்று கூறலாம். இதில் 64 ஜிபி மற்றும் 128 ஜிபி மெமரி வசதியினையும் பயன்படுத்தலாம்.
மைக்ரோசாஃப்டின் இந்த 2 டேப்லட்களின் விரிவான தொழில் நுட்பம் மற்றும் விலை விவரமும் இன்னும் சரிவர அறிவிக்கப்படவில்லை.


Click it and Unblock the Notifications