Home
Computer

டேப்லெட்டுகளை வரிசை கட்டும் மைக்ரோமேக்ஸ்!

By Karthikeyan
டேப்லெட்டுகளை வரிசை கட்டும் மைக்ரோமேக்ஸ்!

இந்தியாவைச் சேர்ந்த மைக்ரோமேக்ஸ் நிறுவனம் சில காலம் மொபைல்களைத் தயாரிப்பதில் அதிக கவனம் செலுத்தி வந்தது. ஆனால் தற்போது டேப்லெட் துறையையும் தனது புதிய டேப்லெட்டுகளால் கலக்க இருக்கிறது.

குறிப்பாக வரும் செப்டம்பர் தொடக்கத்திலேய இரண்டு புதிய டேப்லெட்டுகளை இந்த சந்தையில் மைக்ரோமேக்ஸ் களமிறக்க இருக்கிறது. இந்த புதிய டேப்லெட்டிற்கு பன்புக் அல்பா மற்றும் பன்புக் இன்பினிட்டி என்ற பெயர்கள் சூட்டப்பட்டிருக்கிறது.

இந்த இரண்டு டேப்லெட்டுகளுமே இந்திய ரசிகர்களின் உள்ளங்களைக் கவரும் வகையில் ஏராளமான தொழில் நுட்ப வசதிகளுடன் வருகிறது. குறிப்பாக மைக்ரோமேக்ஸ் ப்ன்புக் அல்பா 7 இன்ச் கப்பாசிட்டிவ் தொடுதிரை மற்றும் 0.3எம்பி முகப்புக் கேமராவுடன் வருகிறது.

மேலும் இந்த அல்பா கேமரா 1ஜிஹெர்ட்ஸ் எ8 ப்ராசஸர் மற்றும் ஆன்ட்ராய்டு 4.0 இயங்குதளம் ஆகியவற்றுடன் வருவதால் இந்த டேப்லெட் மிக வேகமாக இயங்கும் என்று நம்பலாம். இதன் 4ஜிபி ப்ளாஷ் மெமரியை 32ஜிபி அளவிற்கு விரிவு செய்யும் வசதியும் இதில் இருக்கிறது. இந்த டேப்லெட் ரூ.6,500க்கு விற்கப்பட இருக்கிறது.

அடுத்ததாக பன்புக் இன்பினிட்டி 7 இன்ச் கப்பாசிட்டிவ் தொடுதிரை, 1ஜிஹெர்ட்ஸ் எ8 ப்ராசஸர், 2எம்பி முகப்புக் கேமரா மற்றும் 0.3எம்பி பின்பக்க கேமரா போன்ற வசதிகளுடன் வருகிறது. அதோடு இந்த டேப்லெட்டில் 2 ஸ்பீக்கர்கள் இருப்பதால் இதில் சூப்பராக பாடல்களைக் கேட்கலாம்.

இந்த இன்பினிட்டி டேப்லெட் ஆன்ட்ராய்டு 4.0 ஐசிஎஸ் இயங்குதளத்தில் வருகிறது. அதோடு இந்த டேப்லெட் ரூ.6,500க்கு விற்கப்பட இருக்கிறது. மேற்சொன்ன டேப்லெட்டுகளைத் தவிர்த்து இந்த மாத இறுதிக்குள் மேலும் 2 புதிய டேப்லெட்டுகளைக் களமிறக்க இருக்கிறது மைக்ரோமேக்ஸ். இந்த இரண்டு புதிய டேப்லெட்டுகளுக்கும் நின்ஞா3.5 மற்றும் நின்ஞ்சா4.0 என்று பெயர்கள் சூட்டப்பட்டிருக்கின்றன.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X