Home
Computer

அனைவரையும் குஷிப்படுத்த வரும் மைக்ரோமேக்ஸ் டேப்லட்!

By Super

அனைவரையும் குஷிப்படுத்த வரும் மைக்ரோமேக்ஸ் டேப்லட்!
சமீபத்தில் தான் ஃபன்புக் இன்ஃபினிட்டி என்ற புதிய டேப்லட்டினை அறிமுகம் செய்வதாக அறிவித்திருந்த மைக்ரோமேக்ஸ் நிறுவனம், ஃபன்புக் டாக் என்ற புதிய டேப்லட்டினை களமிறக்க உள்ளது.

நவீன மயமான தொழில் நுட்ப வசதிகளை கொடுக்க வரும் இந்த டேப்லட், சிம் காலிங் வசதியினையும் வழங்கும். மேலும் ஆன்ட்ராய்டு இங்குதளம் அரிய வசதிகளையும் எளிய முகறையில் வழங்குவதால், வாடிக்கையாளர்களால் ஆன்ட்ராய்டு எலக்ட்ரானிக் சாதனங்கள் அதிகம் விரும்பப்படுகின்றன.

மைக்ரோமேக்ஸ் ஃபன்புக் டாக் டேப்லட் ஆன்ட்ராய்டு ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டம் வசதி கொண்டதாக இருக்கும். இதனால் டேப்லட் சந்தையில் இந்த புதிய டேப்லட்டிற்கு சிறந்த வரவேற்பு இகருக்கும் தான் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஃபன்புக் டாக் டேப்லட் 1 ஜிகாஹெர்ட்ஸ் கார்டெக்ஸ் ஏ-8 பிராசஸர் கொண்டாதாக இருக்கும். கைக்கு அடக்கமான 7 இஞ்ச் திரையில் பிரம்மிக்க வைக்கும் இந்த டேப்லட்டின் திரை காட்சிகளை தெளிவாக காட்டும். வீடியோ, புகைப்படம் போன்ற எதுவாக இருப்பினும் திருப்தியாக பார்க்கும் வகையில் இந்த டேப்லட் வடிவமைக்கப்பட்டிருக்கும் என்று கூறலாம். எல்சிடி திரை தொழில் நுட்பத்தின் மூலம் 800 X 480 பிக்ஸல் திரை துல்லியத்தினை இந்த டேப்லட் எளிதாக வழங்கும்.

ஆனால் இந்த டேப்லட்டில் இரண்டு கேமராவினை எதிர்பார்க்க முடியாது. இதில் 0.3 மெகா பிக்ஸல் முகப்பு கேமரா மட்டும் கொடுக்கப்படும். மைக்ரோமேக்ஸ் ஃபன்புக் டாக் டேப்லட் 2,800 எம்ஏஎச் பேட்டரி சிறப்பாக 5 மணி நேரம் டாக் டைம் வசதிக்கும், 112 மணி நேரம் ஸ்டான்-பை டைமிற்கும் சப்போர்ட் செய்யும். 4 ஜிபி வரை இன்டர்னல் மெமரி

வசதியினை அளிக்கும் இந்த டேப்லட்டில் 32 ஜிபி வரை கூடுதல் மெமரி வசதியினை பயன்படுத்தி கொள்ளலாம். இந்த டேப்லட் ரூ. 7,249 விலை கொண்டதாக இருக்கும் என்றும் கருதப்படுகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X