Home
Computer

ரூ.8,000ல் மைக்ரோமேக்சின் புதிய ஆன்ட்ராய்டு டேப்லெட்!

By Karthikeyan
ரூ.8,000ல் மைக்ரோமேக்சின் புதிய ஆன்ட்ராய்டு டேப்லெட்!

இந்திய டேப்லெட் சந்தை அபரிமிதமான வளர்ச்சி பெற்று வருகிறது என்பதை மொபைல் தயாரிக்கும் எல்லா நிறுவனங்களும் அறிந்து வைத்திருக்கின்றன. குறிப்பாக பல நிறுவனங்கள் தங்களது ஆன்ட்ராய்டு டேப்லெட்டுகளை இந்திய சந்தையில் களமிறக்கி உள்ளன.

அந்த வகையில் மைக்ரோமேக்ஸ் நிறுவனம் தனது புதிய மைக்ரோமேக்ஸ் பி300 என்ற ஆன்ட்ராய்டு டேப்லெட்டை களமிறக்கி உள்ளது. இந்த புதிய டேப்லெட்டின் விலை ரூ.8000 ஆகும்.

இந்த புதிய மைக்ரோமேக்ஸ் டேப்லெட்டில் ஏராளமான தொழில் நுட்பங்கள் உள்ளன. குறிப்பாக இந்த டேப்லெட் கப்பாசிட்டிவ் மல்டி டச் வசதி கொண்ட 7 இன்ச் திரையைக் கொண்டுள்ளது. 512 எம்பி சேமிப்பைக் கொண்ட ரேமை இந்த டேப்லெட் வழங்குகிறது.

இதன் இன்டர்னல் சேமிப்பு 4ஜிபி ஆகும். இதை எஸ்டி கார்டு மூலம் 32ஜிபி வரை அதிகரிக்க முடியும். அதுபோல் ஒரு 0.3 மெகா பிக்சல் கொண்ட வெப்காமும் இந்த டேப்லெட்டில் உள்ளது.

மேலும் இந்த டேப்லெட் ஆடியோ ப்ளேயர்கள் மற்றும் வீடியோ ப்ளேயர்களை சப்போர்ட் செய்கிறது. அதுபோல் முழு எச்டி 1080பி வீடியோ பதிவை இந்த டேப்லெட் சப்போர்ட் செய்யும். மேலும் இந்த டேப்லெடில் 3ஜி சப்போர்ட்டும் உள்ளது. இதன் பேட்டரி நீண்ட நேர இயங்கு நேரத்தை வழங்குகிறது.

இந்த புதிய மைக்ரோமேக்ஸ் டேப்லெட்டின் ப்ராசஸரைப் பற்றிய தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை. மேலும் இந்த டேப்லெட் 1 வருட உத்திரவாதத்துடன் வருகிறது. இந்த டேப்லெட்டின் முக்கிய அம்சம் என்னவென்றால் இந்த டேப்லெட் ஆன்ட்ராய்டு ஐஸ் க்ரீம் சான்ட்விஜ் இயங்குதளத்தில் இயங்குகிறது. அதனால் இந்த டேப்லெட்டின் விற்பனை சூப்பராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X